azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 10 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 10 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Jesus knew that God wills all. So even when He suffered agony on the cross, He bore no ill-will towards anyone and exhorted those with Him to treat all as instruments of God’s will. It is very difficult to develop unwavering faith and practice this in daily living! The mind, as Arjuna complained, hops from belief to doubt, causing turmoil and confusion. However you can conquer it with self-effort! The black bee can bore a hole in the hardest wood. But while it is sipping nectar from the lotus-flower and dusk intervenes, the open petals close in on the bee, imprisoning it, with no hope of escape! The black bee does not know how to deal with softness! So too, your mind plays its tricks and jumps everywhere; when placed on the lotus feet of the Lord, it becomes inactive and harmless. Cultivate detachment and subdue the vagaries of the mind, and manifest the Divinity latent within you. (Divine Discourse, Dec 24, 1980)
PRACTICE DETACHMENT FROM NOW ON, LITTLE BY LITTLE, EVERY DAY, FOR A DAY WILL COME SOONER OR LATER,WHEN YOU WILL HAVE TO GIVE UP ALL THAT YOU HOLD DEAR. - BABA
ஏசு கிருஸ்து, அனைத்தும் இறைவனது ஸங்கல்பமே என்பதை அறிந்திருந்தார். எனவே தான், அவர் சிலுவையில் அறையப் பட்டு வேதனைப்பட்ட போதும் கூட, எவர் மீதும் காழ்ப்புணர்ச்சி கொள்ளாது, அனைவரையும் இறைவனது ஸங்கல்பத்தின் கருவிகளே எனக் கருதுமாறு அவருடன் இருந்தவர்களுக்கும் அறிவுறுத்தினார். நிலைகுலையாத நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அதை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பது மிகவும் கடினமே! அர்ஜூனன் குறை கூறியது போல, மனம், நம்பிக்கையிலிருந்து சந்தேகத்திற்குத் தாவிக் கொண்டு கலக்கத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்திக் கொண்டு இருக்கும். ஆனால், நீங்கள் உங்களது சொந்த முயற்சியால் அதை வெல்ல முடியும்! கருவண்டு, எவ்வளவு கடினமான மரமாக இருந்தாலும். அதில் ஒரு துளை இட்டு விடும். ஆனால், அது, ஒரு தாமரை மலரில் தேனைச் சுவைத்துக் கொண்டு இருக்கும் போது, மாலை நேரம் குறுக்கிட்டு, திறந்திருந்த இதழ்கள், வண்டை மூடி, தப்பிப்பதற்கான எந்த வழியும் இன்றி அதை சிறையிட்டு விடுகிறது. கரு வண்டிற்கு மிருதுவாக இருக்கும் இதழ்களை எவ்வாறு கையாளுவது என்று தெரியாது! அதைப் போலவே, உங்கள் மனமும் அதன் சித்து வேலைகளைச் செய்து கொண்டு, எல்லா இடத்திற்கும் தாவிக் கொண்டே இருக்கும்; அதை இறைவனது தாமரை மலர் பாதங்களில் வைத்து விட்டால், அது செயலிழந்து, தீங்கிழைக்க இயலாததாக ஆகி விடும். பற்றின்மையை வளர்த்துக் கொண்டு, மனதின் ஊசலாட்டங்களை அடக்கி, உங்களுள் மறைந்திருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துங்கள்.
இப்போதிலிருந்தே பற்றுதலை விடப் பழகிக் கொள்ளுங்கள்; கொஞ்சம்,கொஞ்சமாகப் பழக்கப் படுத்திக் கொண்டு வாருங்கள், ஏனெனில், என்றாவது ஒருநாள், நீங்கள் பிரியமானவை என்று பிடித்துக் கொண்டு இருக்கும் அனைத்தையும் விட்டு விட வேண்டி இருக்கும் - அன்பு பாபா