azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 05 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 05 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
This world is the Lord’s residence: Isavasyam idam jagat. Therefore, no one should entertain a sense of personal possession or even a trace of egotism. Renounce the feeling of attachment and feel the presence of the Lord everywhere. Give up the feelings “I” and “you”; only then you will understand the glory of that which is neither “I” nor “mine”. This does not involve your renouncing everything. The acid test by which an activity can be confirmed as holy or sacred is to examine whether it promotes attachment or avoids bondage. The acid test to decide whether an activity is unholy or sinful is to examine whether it arises from or promotes greed. The real teaching (atma-vidya) directs that the world be dealt with as duty demands, but in a spirit of detachment and avoiding entanglement. Welcome the spiritual bliss that the Lord, the embodiment of spiritual bliss, confers on you and experience it with thankfulness and without being bound by desire. -Vidya Vahini, Ch 1
LET COMPASSION AND SACRIFICE BE YOUR TWO EYES; LET EGOLESSNESS
BE YOUR EVERY BREATH AND LOVE BECOME YOUR TONGUE. - BABA
இந்த உலகம் இறைவனின் இருப்பிடம்; ஈஸாவாஸ்ய இதம் ஜகத். எனவே, எவரும் இதற்காக ஒரு சொந்தம் கொண்டாட முடியாது அல்லது அஹங்காரத்தின் ஒரு சுவடைக் கூடக் கொண்டிருக்க முடியாது. பற்றுதலின் உணர்வை விடுத்து, எங்கும் இறைவனது இருப்பதை உணருங்கள்.’’நான்’’, ‘’ நீ’’ என்ற உணர்வுகளை விட்டு விடுங்கள்;அதன் பின்னரே,‘’ நான்’’ அல்லது‘’ எனது ‘’ என்பதே அற்ற ஒன்றின் மகத்துவத்தைப் புரிந்து கொள்வீர்கள். இதில் நீங்கள் ஒவ்வொன்றையும் விட்டு விட வேண்டும் என்பதல்ல. ஒரு செயல் புனிதமானது என உறுதிப் படுத்துவதற்கான கடும் சோதனை, அந்தச் செயல் பற்றுதலை ஊக்குவிக்கிறதா அல்லது பந்தத்தைத் தவிர்க்கிறதா என்பது தான். ஓரு செயல் புனிதமற்றதா அல்லது பாவகரமானதா என்பதற்கான கடும் சோதனை, அது பேராசையிலிருந்து எழுந்ததா அல்லது அது அதை ஊக்குவிக்கிறதோ என்பது தான். கடமைகளுக்கு ஏற்றபடியும், ஆனால், ஒரு பற்றின்மை உணர்வோடும், சிக்கலில் மாட்டிக் கொள்வதைத் தவிர்த்தும், இந்த உலகைக் கையாள வேண்டும் என உண்மையான கல்வியான ஆத்ம வித்யா வழி காட்டுகிறது. ஆன்மிக ஆனந்தமே உருவான இறைவன், உங்களுக்கு அளிக்கும் ஆன்மிக ஆனந்தத்தை வரவேற்று, ஆசைகளில் கட்டுண்டு விடாமல், நன்றி உணர்வோடு அதை அனுபவியுங்கள்.
தயையும், தியாகமும் உங்களது இரண்டு கண்களாக இருக்கட்டும்; அஹங்காரமின்மை உங்களது உயிர் மூச்சாகவும்,
அன்பு உங்கள் நாவாகவும் இருக்கட்டும். - பாபா