azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 04 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 04 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Once three persons reached the gates of heaven. One of them declared that he was the master of all scriptures and therefore the gates should be opened to let him in. The guardians of the gate said: "You are familiar only with the texts. You have no practical experience. You may leave." The second man said: "I have performed many Yagas and Yajnas" (sacrificial rites and rituals). The guardians told him: "You have performed the sacrifices for selfish aims. You have no place here." The third person, a farmer, neared the gates and said: "I am a poor farmer, owning a hut on two acres of land. I have been offering food and drink to passers-by and giving them shelter when necessary. I have shared with them whatever little I had. This is all the sadhana I have been able to practice." The guardians said: "You may enter." The story illustrates the truth that only those who are prepared to sacrifice what little they have for relieving others in need, are entitled to enter heaven. - Divine Discourse, Mar 26, 1988.
PURE LOVE WILL NOT SUBMIT TO THE FORCES OF ENVY OR HATRED, HOWEVER POWERFUL THEY MAY BE. - BABA
ஒரு முறை மூன்று மனிதர்கள் சொர்க்கத்தின் வாயிலைச் சென்று அடைந்தார்கள். அதில் ஒருவர், தான் அனைத்து சாஸ்திரங்களிலும் பாண்டித்யம் பெற்றவர்; எனவே, சொர்க்கத்தின் கதவுகள் அவர் உள்ளே செல்வதற்காகத் திறக்கப் பட வேண்டும் என்று அறிவித்தார். வாசலின் காவலாளிகள்,‘’ நீங்கள் வெறும் வார்த்தைகளைப் பற்றி அறிந்தவரே. உங்களுக்கு நடைமுறை அனுபவம் கிடையாது. நீங்கள் இங்கிருந்து சென்று விடுங்கள் ‘’ என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். இரண்டாவது மனிதர், ‘’ நான் பல யாகங்களையும், யக்ஞங்களையும் செய்தவன் ‘’ என்று கூறினார். காவலாளிகள் அவரிடம் ‘’ நீங்கள் இவை அனைத்தையும் சுயநலத்திற்காகச் செய்தீர்கள். உங்களுக்கு இங்கே இடம் இல்லை’’ என்று கூறி விட்டார்கள். மூன்றாவது மனிதரான ஒரு விவசாயி வாசலை அணுகி,’’ நான் ஒரு குடிசையையும், இரண்டு ஏக்கர் நிலமும் கொண்ட ஒரு ஏழை விவசாயி. நான் வழிப்போக்கர்களுக்கு உணவும், குடிநீரும் அளித்து, எப்போது தேவையோ அப்போது இருக்க இடமும் அளித்தேன். நான் என்னிடம் இருந்ததை எல்லாம் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.இந்த சாதனை மட்டுமே நான் செய்தது’’ என்று கூறினார். காவலாளிகள், ‘’ நீங்கள் உள்ளே போகலாம் ‘’ என்று அனுமதித்தார்கள். தங்களிடம் உள்ள எந்த சிறியவற்றையையும், தேவைப் பட்டவர்களுக்காகத் தியாகம் செய்யத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே சொர்க்கத்திற்குள் செல்லத் தகுதியானவர்கள் என்ற சத்தியத்தை இந்தக் கதை எடுத்துக் காட்டுகிறது.
அவை எவ்வளவு வலிமையானவையாக இருந்தாலும்,பொறாமை அல்லது த்வேஷத்தின் சக்திகளுக்கு, ப்ரேமை அடி பணியாது - பாபா