azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 01 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 01 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
We speak often about prayer. Prayer does not mean petitioning God. Prayer is an index of the experience of Atmic bliss. It is a method to share this bliss, spreading it all around, and being immersed in that bliss. Prayer must come from the heart. Prayer that is not heartfelt is utterly useless. The Lord will accept a heart without words. But He will not accept words and prayers that do not come from the heart. This is why God is described as Hridayesa (the Lord of the Heart). It is only when you have faith in this, that you will be able to manifest your Divinity. God is inside you, outside you, and around you. Recognise this truth and live according to it. So long as you are filled with doubts, you will not experience peace or happiness. (Divine Discourse, Jul 29, 1988)
PRAYER MUST COME FROM THE DEPTHS OF FEELING; THE LORD LOOKS FOR BHAVA
(SINCERITY OF FEELING),NOT BAHYA (OUTWARD POMP). - BABA
நாம் பிரார்த்தனையைப் பற்றி அடிக்கடிப் பேசுகிறோம். பிரார்த்தனை என்றால், இறைவனுக்கு மனு கொடுப்பது அல்ல. ஆத்மானந்த அனுபவத்தின் ஒரு அளவுக் குறியே பிரார்த்தனை. அது, அந்த ஆனந்தத்தை பகிர்ந்து கொள்வதற்கும், அதை சுற்றிலும் பரப்புவதற்கும் மேலும் அந்த ஆனந்தத்தில் திளைத்திருப்பதற்கும் ஆன ஒரு முறையாகும். பிரார்த்தனை இதயத்தில் இருந்து எழ வேண்டும். இதய பூர்வமாக இல்லாத பிரார்த்தனை முழுவதும் பயனற்றதே. வார்த்தைகளே இல்லாத ஒரு இதயத்தை இறைவன் ஏற்றுக் கொள்வான். ஆனால், இதயத்திலிருந்து வராத வார்த்தைகளையும், பிரார்த்தனைகளையும் இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் தான் இறைவனை ஹ்ருதயேஸா (இதயத்தின் இறைவன்) என வர்ணிக்கப் படுகிறான். இதில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் தான், நீங்கள் உங்களது தெய்வீகத்தை வெளிப்படுத்த முடியும். இறைவன் உங்களுக்குள்ளும், வெளியிலும், உங்களைச் சுற்றியும் இருக்கிறான். இந்த உண்மையை உணர்ந்து, அதற்கு ஏற்றபடி வாழுங்கள். நீங்கள் சந்தேகங்களால் நிரம்பி இருக்கும் வரை, நீங்கள் சாந்தி அல்லது சந்தோஷத்தை அனுபவிக்க மாட்டீர்கள்.
பிரார்த்தனை உணர்வுகளின் ஆழத்தில் இருந்து வர வேண்டும், இறைவன் உணர்வின் சிரத்தையைப் பார்க்கிறானே அன்றி, வெளி உலக படாடோபத்தை அல்ல- பாபா