azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 31 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 31 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Never indulge in revilement of others, for the same Atma is permeating every living being. If you abuse others, it amounts to abusing your own self. If you do not like them, keep yourself away from them, but never abuse them. Any amount of good work done by you will be of no use if you do not identify and give up your bad qualities. If you cannot do good to others, at least speak good words. You may not always oblige, but you can always speak obligingly. If you find someone suffering, try to help them. Today it is their turn, but tomorrow it could be yours. Always keep this in mind. Nobody can escape pain and suffering. Always tread the path of truth and morality. God is love. Whatever He does is for your own good. Always pray for the welfare of all, repeating the universal prayer, “May all the people of the world be happy!” (Divine Discourse, Dec 25, 2002)
DEDICATE YOUR WHOLE LIFE TO GOD AND CARRY ON YOUR EVERY ACTIVITY AS AN OFFERING UNTO HIM. - BABA
ஒரு போதும் பிறரை அவமதிப்பதில் ஈடுபடாதீர்கள்; ஏனெனில் ஒரே ஆத்மா தான் ஒவ்வொரு ஜீவராசியிலும் ஊடுருவி உள்ளது. நீங்கள் பிறரை தூஷித்தால், அது நீங்கள் உங்களையே தூஷித்துக் கொள்வது போலாகும். உங்களுக்கு அவர்களைப் பிடிக்கவில்லை என்றால், அவர்களிடமிருந்து நீங்கள் விலகி இருங்கள்; ஆனால் அவர்களை ஏசாதீர்கள். நீங்கள் உங்களது தீய குணங்களைக் கண்டறிந்து, அவற்றை விட்டு விடவில்லை என்றால், நீங்கள் எந்த அளவு நற்காரியங்களைச் செய்திருந்தாலும் அவை பயனற்றவையே. நீங்கள் பிறருக்கு நல்லதைச் செய்ய முடியாமல் போனாலும், குறைந்த பட்சம், நல்ல வார்த்தைகளைப் பேசுங்கள். நீங்கள் எப்போதும் உதவ முடியாமல் போகலாம், ஆனால் எப்போதும் நீங்கள் இதமாகப் பேசலாமே. யாராவது துன்பப் படுவதை நீங்கள் கண்டால், அவர்களுக்கு உதவ முயலுங்கள். இன்று அது அவர்களது முறை, அதுவே நாளை உங்களது முறையாக இருக்கலாம். இதை எப்போதும் மனதில் கொண்டு இருங்கள். எவரும் துன்பம் மற்றும் துயரத்திலிருந்து தப்ப முடியாது. எப்போதும் சத்யம் மற்றும் சீலத்தின் பாதையிலேயே செல்லுங்கள். ப்ரேமையே இறைவன். அவன் எது செய்தாலும் அது உங்களது சொந்த நன்மைக்காகவே. ‘’ எல்லா உலகங்களிலும் உள்ள அனைத்து மக்களும் சுகமாக இருக்கட்டும் ‘’ என்ற ப்ரபஞ்சமயமான பிரார்த்தனையைத் திரும்பத் திரும்பக் கூறி, அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள்.
உங்கள் வாழ்வனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டு, உங்களது ஒவ்வொரு செயலையும், அவனுக்கு நைவேத்யமாக அர்ப்பணியுங்கள்- பாபா