azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 29 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 29 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
To grasp that service to God and service to mankind is one and the same is dependent on your destiny, past actions, and spiritual discipline. Until you grasp this unity, do meditation and repeat the name, so that your mind becomes free from the waves of thoughts and is filled with the divine form. Also, carry out deeds for the well-being of others. Devote your time to the service of the world, regardless of the results thereof. Thus you will become blessed. Otherwise, though the body may be inactive, your mind will be very busy, committing acts on its own. People with such minds fall prey to fate (karma) in spite of their not doing anything! When a person has the mind fixed on contemplation of God and the pursuit of truth, though the body and senses do acts that are of service to the world, they won’t be affected by them; though they do actions (karma), they are still non-doers of action. The lesson of the Bhagavad Gita is embedded in this. (Prema Vahini, Ch 72)
THE HEART OF THE PERSON WHO DOESN’T STRIVE TO CULTIVATE THE MIND WITH HOLY THOUGHTS IS THE PARADISE OF EVIL AND WICKEDNESS. WHEN THE HEART IS PURE, THE LIGHT OF WISDOM SHINES. - BABA
மனித குலத்திற்க்கு ஆற்றும் சேவையும், இறைவனுக்கு ஆற்றும் சேவையும் ஒன்றே என்பதைப் புரிந்து கொள்வது என்பது, உங்களது விதி, கடந்த கால செயல்கள் மற்றும் ஆன்மிக சாதனை ஆகியவற்றைப் பொறுத்ததாகும். நீங்கள் இந்த ஒற்றுமையைப் புரிந்து கொள்ளும் வரை, உங்கள் மனம் எண்ண அலைகள் இன்றியும், தெய்வீக ரூபத்தால் நிரம்பியும் இருப்பதற்கு ஏற்றவாறு, தியானம் மற்றும் இறை நாமஸ்மரணையைச் செய்யுங்கள். மேலும், பிறரது நலனுக்கான பணிகளைச் செய்யுங்கள். அவற்றின் பலன்கள் எதுவாயினும், உங்களது நேரத்தை உலகின் நலனுக்கான சேவைக்கு அர்ப்பணியுங்கள். இவ்வாறு நீங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாக ஆவீர்கள். இல்லை என்றால், உங்கள் உடல் செயலின்றி இருந்தாலும் கூட, உங்கள் மனம் அதனது சொந்த செயல்களை மிகவும் சுறுசுறுப்பாக ஆற்றிக் கொண்டே இருக்கும். இப்படிப் பட்ட மனம் படைத்த மனிதர்கள், அவர்கள் எதையும் செய்யாத போதிலும், தங்களது கர்ம வினைக்கு இரையாகி விடுவார்கள்! எப்போது ஒரு மனிதர், இறை தியானத்திலும் மற்றும் சத்யத்தை தேடுவதிலும் தனது மனதை நிலை கொள்ளச் செய்கிறாரோ, அவரது உடலும் புலன்களும் உலகத்தின் சேவையில் ஈடுபட்டு இருந்தாலும் கூட, அவர் அவற்றால் பாதிக்கப் படுவதில்லை; அவர்கள் கர்மாவை ஆற்றிக் கொண்டிருந்தாலும், அவர்கள் அந்த வினையை செய்யாதவர்களே. ஸ்ரீமத் பகவத் கீதையின் போதனை இதில் பொதிந்துள்ளது.
மனதைப் புனித சிந்தனைகளால் நிரப்பப் பாடுபடாத மனிதன், தீமை மற்றும் கொடூரத்தின் சுவர்க்கமாவான்.இதயம் பரிசுத்தமாக இருக்கும் போது, ஞான ஜோதி ஒளிர் விட்டுத் திகழும் - பாபா