azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 26 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 26 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Prayers of the noble and virtuous act as an invitation even for the advent of the Lord. In the external world, when common people need conveniences, they approach authorities and request them. Similarly, in the internal realm, when there is no possibility of achieving and acquiring devotion, charity, peace and truth, noble and virtuous, who yearn for these to grow, pray to the Lord. Then, listening to their prayers, He Himself comes and showers His grace. This fact is well known. Many would have read in the Ramayana and Bhagavata - Didn’t Rama and Krishna incarnate because the Lord heeded the prayers of sages? Even Saint Ramakrishna, though divinely-born, prayed to Goddess Kali to send someone who could preach to the whole world, the code of conduct (dharma) that would uproot injustice and selfishness. Hence, prayers should be offered again and again for the fulfilment of this task without becoming desperate and giving up, if they don’t yield results immediately. (Prema Vahini, Ch 70)
PRAYER MUST COME FROM THE DEPTHS OF FEELING; THE LORD LOOKS FOR BHAVA (SINCERITY OF FEELING),
NOT BAHYA (OUTWARD POMP). - BABA
இறைவனது அவதாரம் நிகழ்வதற்குக் கூட, ஆன்றோர்கள் மற்றும் ஒழுக்க சீலர்களின் பிரார்த்தனைகள் ஒரு வரவேற்பு மடலாக செயல்படுகின்றன. புற உலகில், சாதாரண மக்கள் சௌகரியங்கள் தேவைப்படும்போது, அதிகாரிகளை அணுகி, அவர்களை வேண்டுகிறார்கள். அதைப் போலவே, அக உலகில், பக்தி, தானம், சாந்தி மற்றும் சத்யம் ஆகியவற்றை வென்று பெறுவதற்கான வாய்ப்பு இல்லாத போது, இவை வளர வேண்டும் என விழையும், ஆன்றோர்களும், சான்றோர்களும், இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பின்னர், அவர்களது பிரார்த்தனைக்கு இணங்கி, இறைவன் தானே வந்து அவனது அருளைப் பொழிகிறான். இந்த உண்மை அனைவரும் அறிந்ததே. பலர் ஸ்ரீமத் ராமாயணம் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் படித்திருப்பார்கள் – ஸ்ரீராமரும், ஸ்ரீ கிருஷ்ணரும், முனிவர்களின் பிரார்த்தனைகளின் காரணமாக அவதாரம் எடுத்து வந்தனர் இல்லையா? தெய்வீகப் பிறவியான ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் கூட, காளி மாதாவிடம், அநீதி மற்றும் சுயநலத்தை வேரோடு களைய வல்ல தர்மத்தை உலகனைத்திற்கும் போதிக்க வல்ல ஒருவரை அனுப்புமாறு பிரார்த்தித்தார். எனவே, அவை உடனடியாக பலன் அளிக்காவிட்டாலும் கூட, அவநம்பிக்கை அடைந்து கைவிட்டு விடாமல், இந்தப் பணியை முடிப்பதற்கான பிரார்த்தனைகளை மறுபடியும், மறுபடியும் செய்ய வேண்டும்.
பிரார்த்தனை உணர்வுகளின் ஆழத்தில் இருந்து வர வேண்டும், இறைவன் உணர்வின் சிரத்தையைப் பார்க்கிறானே அன்றி, வெளி உலக படாடோபத்தை அல்ல- பாபா