azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 24 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 24 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Do not worry that the New Year implies dangerous prospects. No danger will befall this world. With sacred feelings and divine thoughts, cultivate the spirit of love within. Learn today to fill your hearts with selfless love and adorn your hands with the ornament of sacrifice. Sacrifice is the jewel for your hands. Truth is the beautiful chain you should wear. Develop the habit of adorning these jewels every day in the New Year. Truth is God. Love is God. Righteousness [Dharma] is God. When you worship God practicing these principles everyday, He will manifest Himself. Do not doubt this! Be prepared to face challenges with love and broadmindedness. Befriend God, you are bound to be successful in all your endeavours! Love God wholeheartedly. You will lead a blissful and peaceful life full of enthusiasm. Pray with a broad feeling: Samastha Loka sukhino bhavantu (May the whole world be happy)! Cultivate selfless love and foster peace across all nations! (Divine Discourse Mar 18, 1999)
YOUR DUTY IS TO PRAY FOR THE WELFARE OF THE WORLD
AND TO WORK FOR IT AS FAR AS IT LIES IN YOUR POWER. - BABA
புத்தாண்டு என்றாலே. பயங்கரமான விளைவுகள் எனக் கவலைப் படாதீர்கள். எந்த அபாயமும் இந்த உலகிற்கு வராது. புனிதமான உணர்வுகள் மற்றும் தெய்வீக சிந்தனைகளின் மூலம், அகத்தினுள் ப்ரேமையை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். இன்று, உங்கள் இதயங்களை தன்னலமற்ற ப்ரேமையால் நிரப்பிக் கொள்ளவும், உங்கள் கரங்களை தியாகமெனும் ஆபரணத்தால் அலங்கரித்துக் கொள்ளவும் கற்றுக் கொள்ளுங்கள். தியாகமே உங்கள் கரங்களுக்கான ஆபரணமாகும், சத்தியமே நீங்கள் அணிந்து கொள்ள வேண்டிய அழகான சங்கிலியாகும். புத்தாண்டில், இந்த ஆபரணங்களை தினந்தோறும் அணிந்து கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். சத்தியமே இறைவன். ப்ரேமையே இறைவன். தர்மமே இறைவன். இந்த இலட்சியங்களை தினந்தோறும் கடைப்பிடித்து நீங்கள் இறைவனை வழி பட்டால், இறைவன் தானே உங்கள் முன் தோன்றுவான். இதில் சந்தேகமே வேண்டாம்! சவால்களை ப்ரேமை மற்றும் பரந்த மனப்பாங்குடன் எதிர் கொள்ளத் தயாராக இருங்கள். இறைவனோடு நட்பு கொள்ளுங்கள்; நீங்கள் உங்களது எல்லா முயற்சிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். இறைவனை இதயபூர்வமாக நேசியுங்கள். நீங்கள், ஒரு உற்சாகம் நிறைந்த, ஆனந்தமான மற்றும் சாந்தி பூர்வமான வாழ்க்கையை நடத்துவீர்கள். லோகங்கள் அனைத்தும் சுகமாக இருக்கட்டும் ( ஸமஸ்த லோகாஸ் சுகினோ பவந்து ) என்ற பரந்த மனப்பாங்குடன் பிரார்த்தியுங்கள் ! தன்னலமற்ற ப்ரேமையை வளர்த்துக் கொண்டு அனைத்து தேசங்களிலும் சாந்தியைப் பேணுங்கள் !
உலக நன்மைக்காகப் பிரார்த்தித்து, உங்கள் சக்திக்கு இயன்றவரை
அதற்காக உழைப்பது, உங்கள் கடமையாகும்- பாபா