azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 19 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 19 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Whatever inconveniences one may encounter, one must try to carry on spiritual practices without any break or modification in the disciplines. Taking all worldly losses, sufferings, and worries as merely temporal and transitory, and realising that all this repetition of the name and meditation is only to overcome such grief, the spiritual aspirant should keep the two things separate, without mixing up the two. The aspirant must understand that loss, suffering, and worry are external, belonging to this world, and that repetition of the name and meditation are internal, belonging to the realm of the love for the Lord. This is called chaste (pathivratha) devotion. At the specified time, at least recall to mind the meditation and repetition of the name done at the same time in the past, even if you are in a railway train, a bus, or some such inconvenient surrounding. In this way, accumulating spiritual wealth, one can surely become the master, and attain the Atma. - Prema Vahini, Ch. 64
TRUE DEVOTION LIES IN ACCEPTING BOTH PLEASURE AND PAIN WITH EQUAL-MINDEDNESS. - BABA
நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய அசௌகரியங்கள் எதுவாக இருந்தாலும், ஒருவர் ஆன்மிக சாதனையை, அவற்றில் எந்த இடைவெளியோ அல்லது மாற்றமோ இல்லாமல், மேற்கொள்ள முயல வேண்டும். அனைத்து உலகியலான நஷ்டங்கள், துன்பங்கள் மற்றும் கவலைகளை வெறும் தாற்காலிகமானவை மற்றும் கலைந்து செல்லக் கூடியவையாக எடுத்துக் கொண்டும், இறைநாமஸ்மரணை மற்றும் தியானம் இப்படிப் பட்ட துயரத்தை வெல்வதற்காகவே என்பதை உணர்ந்தும், ஆன்மிக சாதகர் இந்த இரண்டையும் கலந்து விடாமல் தனித் தனியாக கையாள வேண்டும்.ஆன்மிக சாதகர், நஷ்டம், கஷ்டம் மற்றும் கவலை ஆகியவை புற உலகைச் சார்ந்தவை என்பதையும் இறை நாமஸ்மரணை மற்றும் தியானம் ஆகியவை இறைவன் பால் கொள்ளும் ப்ரேமையைச் சார்ந்த உள்ளார்ந்தவை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இதுவே பதிவ்ரதையான பக்தி எனப்படுகிறது. நீங்கள் ஒரு ரயில், ஒரு பஸ் அல்லது ஏதாவது ஒரு அசௌகரியமான சூழலில் இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட நேரத்தில், கடந்த காலத்தில் அதே நேரத்தில் நீங்கள் செய்த இறைநாமஸ்மரணை மற்றும் தியானத்தை குறைந்த பட்சம் திரும்ப நினைவு கூறுங்கள். இந்த விதத்தில்,ஆன்மிகச் செல்வத்தைக் குவித்துக் கொண்டு, ஒருவர் கண்டிப்பாக மாமனிதராக ஆகி, ஆத்மாவை அடைய முடியும்.
சுகத்தையும், துக்கத்தையும், சமச்சீரான மனப்பாங்குடன்
ஏற்றுக் கொள்வதில் தான் உண்மையான பக்தி இருக்கிறது. - பாபா