azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 13 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 13 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

People crave worldly happiness. Analysed properly, this itself is the disease, and sufferings are but the drugs we take. In the midst of these worldly pleasures, one rarely entertains the desire to attain the Lord. Besides, it is necessary to analyse and discriminate every act of a person, for the spirit of renunciation is born out of such analysis. Without it, renunciation is difficult to get. Miserliness is like the behaviour of a dog; it has to be transformed. Anger is enemy Number 1 of the spiritual aspirant; it is like spittle and has to be treated as such. And untruth? It is even more disgusting —through untruth, the vital powers of all are destroyed. It should be treated as scavenging itself. Theft ruins life; it makes the priceless human life cheaper than a pie; it is like rotten foul smelling flesh. - Prema Vahini, Ch. 61
LIVE, AVOIDING EVIL DEEDS, HATEFUL AND HARMFUL THOUGHTS,
AND DON’T GET ATTACHED TO THE WORLD. - BABA
மனிதர்கள் உலகியலான சந்தோஷத்திற்கு ஏங்குகிறார்கள். சரியாக ஆராய்ந்தால், இதுவே ஒரு வியாதியாகும்; படும் கஷ்டங்கள் நாம் அதற்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளே அன்றி வேறில்லை. இந்த உலக சுகங்களுக்கு இடையில், ஒருவர் மிகவும் அரிதாகவே இறைவைனப் பெறுவதற்கான ஆசையை வரவேற்கிறார். மேலும்,ஒரு மனிதனுடைய ஒவ்வொரு செயலையும் ஆராய்ந்து பகுத்தறிவது அவசியமாகிறது; ஏனெனில் இப்படிப் பட்ட ஆய்விலிருந்து தான் துறவு மனப்பாங்கு பிறக்கிறது. அது இன்றி, துறவு மனப்பாங்கைப் பெறுவது கடினமே. கஞ்சத்தனம் என்பது ஒரு நாயின் நடத்தையைப் போன்றது;அதைத் திருத்தி அமைக்க வேண்டும். கோபம், ஆன்மிக சாதகனின் முதல் எதிரியாகும்; அது எச்சில் போன்றது. பொய்மை? அது அதற்கு மேலும் அருவருப்பானது- பொய்மையின் மூலம் அனைவரின், இன்றிமையாத சக்திகளும் அழிக்கப் பட்டு விடுகின்றன. அதைக் கழிவுநீரைப் போலக் கையாள வேண்டும். திருட்டு வாழ்க்கையை நாசமாக்குகிறது; அது விலை மதிப்பற்ற மனித வாழ்க்கையை ஒரு சல்லிக்காசை விட மலிவானதாக ஆக்குகிறது; அது அழுகிய மீனின் துர்நாற்றம் போன்றதாகும்.
தீய செயல்கள், வெறுப்பான, தீங்கு விளைவிக்கும் சிந்தனைகள் ஆகியவற்றைத் தவிர்த்து வாழுங்கள்; மேலும் உலகின் மீது பற்று வைக்காதீர்கள்- பாபா