azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 12 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 12 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Devotion is not wearing an ochre cloth or organising festivals or performing ritual sacrifices or shaving the hair or carrying water pot or rod or matting the hair, etc. The Lord will never judge you at any time on the basis of the religion or caste you belong or the precepts you traditionally follow. The real characteristics of true devotion are: (1) Having a pure mind (anthah-karana) (2) Uninterrupted contemplation on God, whatever be your profession in daily living (3) The feeling that everything is the Lord’s creation and therefore One (4) Acceptance of all with equal love (5) Non-attachment to sense objects, and (6) Practicing true speech. Whoever you are, in whatever condition you may be, if you do not give room for dispiritedness, if you have no fear at all, and if you remember the Lord with unshaken faith and without any ulterior motive, all your suffering and sorrow will surely fall away! (Prema Vahini, Ch 61)
MODERATE FOOD, MODERATE SLEEP, LOVE (PREMA), FORTITUDE - THESE WILL HELP IN THE UPKEEP OF THE HEALTH OF BOTH BODY AND MIND. - BABA
காவி உடையை உடுத்திக் கொள்வது அல்லது பண்டிகைகளைக் கொண்டாடுவது அல்லது யாகங்களைச் செய்வது அல்லது முடியைக் களைவது அல்லது தண்ணீர் குடம் அல்லது இரும்புக் கம்பைச் சுமந்து செல்வது அல்லது ஜடாமுடி தரிப்பது ஆகியவை, பக்தி அல்ல. இறைவன் எந்தக் காலத்திலும், நீங்கள் எந்த மதம் அல்லது குலத்தைச் சார்ந்தவர் அல்லது பரம்பரையாக எந்த போதனைகளை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்பதை வைத்து உங்களை ஒரு போதும் மதிப்பிடுவதில்லை. உண்மையான பக்தியின் அம்சங்கள் (1) பரிசுத்தமான மனதைக் கொண்டிருப்பது (அந்தக் கரணா) (2) அன்றாட வாழ்க்கையின் உங்கள் தொழில் எதுவாக இருந்தாலும், இடையறாத இறைச் சிந்தனை (3) அனைத்தும் இறைவனது படைப்பு என்பதால், அனைத்தும் ஒன்றே என்ற உணர்வு (4) அனைவரையும் சமமான ப்ரேமையுடன் ஏற்றுக் கொள்வது (5) புலன்களை ஈர்க்கும் பொருட்களின் மீது பற்றின்மை மற்றும் (6) உண்மையான பேச்சைக் கடைப்பிடித்தல். நீங்கள் யாராக இருந்தாலும், எந்த நிலைமையில் நீங்கள் இருந்தாலும், நீங்கள் மனத்தளர்ச்சிக்கு இடம் கொடுக்காமல், அச்சம் எதுவும் இன்றி, அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் எந்த விதமான உள்நோக்கமும் இன்றி இறைவனை சிந்தித்துக் கொண்டும் இருந்தால், உங்களது அனைத்து துன்பமும் துயரமும் கண்டிப்பாக வீழ்ந்து விடும் !
மிதமான உணவு, மிதமான உறக்கம்,ப்ரேமை மற்றும் மனோபலம்-
இவை, உடல் மற்றும் மன நலனைப் பேணுவதில் உதவி புரியும் -பாபா