azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 11 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 11 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Devotees should consider the body as the field and good deeds as seeds and cultivate the name of the Lord, with the help of the heart as the farmer, in order to get the harvest, the Lord Himself. How can one get the crop without cultivation? Like cream in milk and fire in fuel, the Lord is in everything. Have full faith in this. As the milk, so the cream; as the fuel, so the fire; so also, as the spiritual discipline, so the direct experience (sakshatkara) of the Lord, right? Even if the attainment of liberation (mukti) isn’t directly realised as a consequence of taking up the Lord’s name, four fruits will clearly be evident to everyone who sincerely does the sadhana: 1. Company of the good and godly 2. Truth 3. Contentment and 4. Control of the senses. Through whichever of these gates one enters, whether one is a householder, recluse, or a member of any other class, one can reach the Lord without fail. This is certain. (Prema Vahini, Ch 60)
THERE IS NO PENANCE (TAPAS) HIGHER THAN FORTITUDE, NO HAPPINESS GREATER THAN CONTENTMENT,
NO GOOD DEED (PUNYA) HOLIER THAN MERCY, NO WEAPON MORE EFFECTIVE THAN PATIENCE. - BABA
- BABA
இறைவனையே அறுவடையாகப் பெறுவதற்கு, பக்தர்கள், உடலையே நிலமாகவும், நற்கருமங்களையே விதைகளாகவும் கருதி, இறைவனது திருநாமத்தை, இதயம் எனும் விவசாயியின் உதவியுடன் பயிர் செய்ய வேண்டும். பயிர் செய்யாமல் ஒருவர் அறுவடையை எவ்வாறு பெற முடியும்? பாலில் வெண்ணையைப் போலவும்,எரிபொருளில் நெருப்பைப் போலவும், இறைவன் அனைத்திலும் உறைந்துள்ளான்.இதில் முழு நம்பிக்கை கொண்டு இருங்கள். பால் எப்படியோ, வெண்ணைய் அப்படியே; எரிபொருள் எப்படியோ, நெருப்பும் அப்படியே; அதைப் போலவே, ஆன்மிக சாதனை எப்படியோ இறைவனைப் பற்றிய நேரடி அனுபவமும் (சாக்ஷாத்காரம்) அப்படியே இல்லையா? இறைவைனது திருநாமத்தை ஏற்றுக் கொள்வதன் பலனாக முக்தி பெறுவது என்பதை நேரடியாக உணர முடியாவிட்டாலும் கூட, நான்கு விதமான பலன்கள், ஆன்மிக சாதனையை சிரத்தையாக மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தெளிவாகப் புலனாகும் 1. நல்லோர்கள் மற்றும் இறைச் சிந்தனையாளர்களின் நட்பு வட்டம் 2. சத்தியம். 3.திருப்தி 4. புலனடக்கம். ஒருவர் கிரஹஸ்தனாகவோ, சந்நியாசியாகவோ அல்லது வேறு எந்த நிலையில் உள்ளவராகவோ இருந்தாலும், இதில் எந்த வாயிலின் வழியாக ஒருவர் நுழைந்தாலும், அவர் கண்டிப்பாக இறைவனை அடைவார். இது நிச்சயம்.
மனோபலத்தை விட உயர்ந்த தவம் எதுவுமில்லை, திருப்தியை விடப் பெரிய சந்தோஷம் எதுவுமில்லை,கருணையைவிட புனிதமான புண்யம் எதுவுமில்லை; பொறுமையை விடப் பயனுள்ள ஆயுதம் எதுவுமில்லை- பாபா