azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 10 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 10 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
When a lamp is lit in the temple, remember, it is not the temple or the deity that needs illumination, it is the worshipper. The material temple of stone and mortar might be lit up by means of a few bulbs and lamps, but really speaking, everyone is a moving temple with the Lord installed in the shrine of the heart. That shrine must shine, bright and clear. Now, it is plunged in the darkness of falsehood, injustice, cruelty and pride. The act of ‘lighting up’ symbolises illumination of the heart, destruction of the darkness of egoism and ignorance, so that the Lord might be revealed in all His Glory. The trouble is that even though knowledge is growing fast in all fields, wisdom is lagging. People are slaves of passion and pride, and are infected with envy, cynicism and conceit everywhere. They let their mind drag them wherever it wills! Control of the mind can be achieved through spiritual discipline and training! (Divine Discourse Jul 18, 1961)
LIGHT IS HOLY, SACRED. DO NOT MISUSE IT FOR LOWER ENDS, BUT GIVE IT
PROPER VALUE AND ENGAGE YOURSELVES IN HOLY PURSUITS. - BABA
ஆலயத்தில் ஒரு விளக்கேற்றப் படும்போது, ஆலயத்திற்கோ அல்லது அதில் உள்ள விக்ரஹத்திற்கோ அல்ல ஆனால், வழிபட வருபவருக்கே வெளிச்சம் தேவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கல்லாலும், சுண்ணாம்பாலும் ஆன கோவில் சில பல்புகள் மற்றும் விளக்குகளால் ஒளியேற்றப் படலாம்; ஆனால், உண்மையைக் கூற வேண்டுமானால், ஒவ்வொருவரும், இதயம் எனும் கோவிலில் இறைவன் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு நடமாடும் ஆலயமே. அந்த ஆலயம், பிரகாசமாகவும், தெளிவாகவும் ஒளிர வேண்டும். அது இப்போது, பொய்மை, அநீதி, கொடுமை மற்றும் தற்பெருமை என்ற இருளில் மூழ்கி உள்ளது. இறைவன், அவனது முழுமையான மகிமையோடு வெளிப்படுவதற்கு ஏற்ப, இந்த ‘’ஒளியூட்டும்‘’ செயல், இதயத்திற்கு ஒளியூட்டி, அஹங்காரம் மற்றும் அறியாமை எனும் இருளை அழிப்பதைக் குறிப்பதாகும். கொடுமை என்ன என்றால், அறிவு அனைத்து துறைகளிலும் வேகமாக வளர்ந்து கொண்டு இருந்தாலும், ஞானம் பின் தங்கியுள்ளது. மனிதர்கள், பேராவல் மற்றும் தற்பெருமைக்கு அடிமையாகி, பொறாமை,வெறுப்பு மற்றும் வன்மத்தால் பீடிக்கப் பட்டுள்ளனர். அவர்கள், தங்கள் மனம், போன போக்கில் எல்லாம் செல்ல அனுமதிக்கிறார்கள். ஆன்மிக சாதனை மற்றும் பயிற்சியின் மூலம் மனதைக் கட்டுப் படுத்த முடியும் !
ஜோதி பரிசுத்தமானது, புனிதமானது. அதை கீழ்த்தரமான பலன்களுக்குத் தவறாகப் பயன்படுத்தாது, ஆனால், அதற்குத் தகுந்த மதிப்பளித்து, உங்களை நீங்களே புனிதமான செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் - பாபா