azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 05 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 05 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Rice in its natural state, and boiled rice — can these two be the same? The hardness of natural rice is absent in the boiled one. The boiled grain is soft, harmless, and sweet. The unboiled grain is hard, conceited, and full of delusion. Similarly both the types of human beings are souls (jivis), but those immersed in external illusions (avidya-maya) are ‘people’, while those immersed in internal illusions (vidya-maya) are ‘spiritual aspirants’. God is immersed in neither external nor internal illusions. He is devoid of both. He who has no external illusions becomes a spiritual aspirant, and when he is devoid of even internal illusions, he can be termed a God. Such a person’s heart becomes the seat of God. Though the Lord is situated in every heart, spiritual practice is necessary so that they may discover it for themselves, right? It isn’t possible for us to see our own face! We need a mirror to show us its image. So too, a basic path (marga), a spiritual practice, is necessary to become devoid of qualities (gunas). (Prema Vahini, Ch 59)
WHEN THE SAMSKARAS (SPIRITUAL DISCIPLINES) LEAD TO THE REFINEMENT OF THE SPIRIT,
THE EXPERIENCE OF ONENESS WITH THE DIVINE NATURALLY COMES. - BABA
அரிசி, சமைக்கப்பட்ட அரிசி – இந்த இரண்டும் ஒன்றே தானா? அரிசியின் கடினத்தன்மை, சமைக்கப் பட்ட ஒன்றில் இருப்பதில்லை.சமைக்கப் பட்ட தானியம் மிருதுவாகவும், பாதிப்பை ஏற்படுத்தாமலும், இனிமையாகவும் இருக்கும். சமைக்கப் படாத தானியம் கடினமாகவும், கர்வமுடனும், மாயை நிரம்பியதாகவும் இருக்கும்.அதைப் போலவே, இரண்டு விதமான மனிதர்களும், ஆத்மாக்களாக ( ஜீவிகள்) இருந்தாலும் கூட, புற மாயைகளில் ( அவித்ய மாயா ) மூழ்கி இருப்பவர்கள் ‘’ மனிதர்கள் ‘’, அக மாயைகளில் ( வித்யா மாயா ) மூழ்கி இருப்பவர்கள், ‘’ ஆன்மிக சாதகர்கள் ‘’. இறைவனோ புற அல்லது அக என இரண்டு மாயைகளிலுமே மூழ்கி இருப்பதில்லை. அவன் இந்த இரண்டுமே அற்றவன். புற மாயைகள் அற்றவன் ஒரு ஆன்மிக சாதகனாகிறான்; எப்போது அவன் அக மாயைகளும் கூட அற்றவனாகிறானோ, அவனை ஒரு இறைவன் என்றே அழைக்கலாம். இப்படிப் பட்ட மனிதனின் இதயம் இறைவனது சன்னிதானம் ஆகி விடுகிறது. இறைவன் ஒவ்வொரு இதயத்திலும் வீற்றிருந்தாலும், அவர்களே அவனைக் கண்டு கொள்வதற்கு ஆன்மிக சாதனை அவசியமாகிறது. இல்லையா? நாமே, நமது முகத்தைப் பார்த்துக் கொள்ள முடியாது! அந்த உருவத்தைக் காட்ட, நமக்கு ஒரு கண்ணாடி தேவை. அதைப் போலவே, குணங்களே (குணாஸ்) இன்றி இருப்பதற்கு, ஒரு அடிப்படைப் பாதை ( மார்க்க), ஒரு ஆன்மிக சாதனை அவசியமாகிறது.
ஸம்ஸ்காரங்கள் (ஆன்மிக சாதனைகள்), ஆத்மாவைப் பண்படுத்துவதற்கு இட்டுச் செல்லும் போது,தெய்வீகத்துடனான ஒருமை அனுபவம் இயல்பாகவே வந்து விடுகிறது- பாபா