azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 04 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 04 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
The spiritual aspirant should note the distinction between the conduct of the natural (sahaja) person and the spiritual aspirant. The natural person has no fortitude (sahana), is conceited (ahamkara), and is full of desires relating to the world (jagat), by which the person is trying to have a contented existence. Aspirants engaged in contemplation of the Lord (Sarveswara-chintana) as ceaselessly as the waves of the sea (sagara), accumulate the wealth (dhana) of equality and equal love to all, and are content in the thought that all is the Lord’s and nothing is theirs. Unlike the natural person, the spiritual seeker won’t easily bend before grief or loss, anger or hatred or selfishness, hunger, thirst or fickleness. Quarreling at every tiny little thing, losing one’s temper, becoming sad at the slightest provocation, getting angry at the smallest insult, worried at thirst, hunger, and loss of sleep — these can never be the characteristics of a true spiritual aspirant! (Prema Vahini, Ch 59)
TO RESURRECT LOVE AND COMPASSION, YOU MUST KILL JEALOUSY
AND SELFISHNESS, AND PURIFY YOUR HEARTS. - BABA
ஒரு ஆன்மிக சாதகர், ஒரு சாதாரண மனிதனின் நடத்தைக்கும், ஆன்மிக சாதகனது நடத்தைக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். ஒரு சாதாரணமான மனிதனுக்கு சகிப்புத்தன்மை(சஹானா) இருப்பதில்லை, அகம்பாவம்(அஹங்கார) கொண்டவராகவும், உலகியலான (ஜகத்) ஆசைகளைக் கொண்டவராகவும், அவற்றின் மூலம் ஒரு திருப்தியான வாழ்க்கை வாழ முயல்பவராகவும் இருப்பார். கடல் (சாகர) அலைகளைப் போல இடையறாது இறைவனது சிந்தனையில் (ஈஸ்வர- சிந்தனா) ஈடுபட்டு இருக்கும் ஆன்மிக சாதகர்கள்,சமத்துவம் என்ற செல்வத்தைக் ( தனா) குவித்துக் கொண்டும், அனைவரிடத்தும் சமமான ப்ரேமையுடனும், அனைத்தும் இறைவனுடையதே, எதுவும் அவர்களுடையதல்ல என்ற சிந்தனையால் திருப்தியுடனும் இருப்பார்கள். சாதாரண மனிதரைப் போல அல்லாது, ஆன்மிக சாதகர், துக்கம் அல்லது நஷ்டம்,கோபம் அல்லது வெறுப்பு அல்லது சுயநலம், பசி, தாகம் அல்லது சஞ்சல புத்தி ஆகியவற்றின் முன் எளிதில் தலை குனிய மாட்டார்கள். ஒவ்வொரு அற்ப விஷயத்திற்கும் சண்டையிடுவது, கோபப்படுவது, சிறிய ஆத்திர மூட்டலுக்குக் கூட துக்கமடைவது, மிகச் சிறிய பழிச்சொல்லுக்குக் கூட கோபப்படுவது, தாகம், பசி, அல்லது தூக்கமின்மை ஆகியவற்றைப் பற்றிக் கவலைப் படுவது- இவை ஒரு போதும் ஒரு உண்மையான ஆன்மிக சாதகரின் இயல்புகளாக இருக்க முடியாது !
ப்ரேமையையும், பரிவையும் புனருத்தாரணம் செய்வதற்கு, நீங்கள் பொறாமையையும், சுயநலத்தையும் அழித்து, உங்கள் இதயங்களை பரிசுத்தமாக்கிக் கொள்ள வேண்டும் - பாபா