azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 02 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 02 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Those agitated by doubts about what to accept and reject, those blinded by illusion, unable to distinguish between darkness and light, death and immortality, should approach great saints to understand the eternal truth - the self-illumined basis of all creation. Then, both this world and heaven will be merged in the same effulgence! To attain this realisation, one should have deep yearning and hard, disciplined practice. This human birth is the consequence of countless good deeds, and it should not be cast aside; the chance must be fully exploited! For all those who are really animals in human form, slaves of pride and animal traits, this awareness in time is most important. Therefore, the discriminating individual will endeavour by all means at their disposal to understand the underlying principles, to master the teachings of the great people who practised the spiritual path, and to bring all this, as much as possible, into the ken of their own experience. (Prema Vahini, Ch 57)
POMP AND PRIDE HAVE TO BE GIVEN UP TO EXPERIENCE GOD. - BABA
எதை ஏற்பது, எதை நிராகரிப்பது என்பதைப் பற்றிய சந்தேகங்களால் குழப்பம் அடைந்திருப்பவர்களும்,மாயையால் கண்மூடப்பட்டவர்களும், இருள்- வெளிச்சம், இறப்பு- அமரத்துவம் ஆகியவற்றைப் பிரித்துப் பார்க்க முடியாவர்களும்- இந்த அனைவரும் அனைத்து சிருஷ்டியின் ஸ்வயம்பிரகாச அடிப்படையான நித்ய சத்தியத்தைப் புரிந்து கொள்வதற்கான பாதையைக் காட்டக் கூடிய ஆன்றோர்களை அணுக வேண்டும். பின்னர் இகமும், பரமும் அதே ஜோதியில் ஒன்றரக் கலந்து விடும் !இந்த உணர்தலுக்காக ஒருவர் ஆழ்ந்த தாபமும், கடினமான, கட்டுப்பாட்டான சாதனையும் கொண்டவராக இருக்க வேண்டும். இந்த மனிதப் பிறவி எண்ணற்ற நற்செயல்களின் பலனாகும், இதை உதறித் தள்ளி விடக்கூடாது; இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; மனித உருவில் உண்மையிலேயே மிருகங்களாகவும், தற்பெருமை மற்றும் மிருக குணங்களுக்கு அடிமையாகவும் இருக்கும் அனைவருக்கும், காலத்தைப் பற்றிய இந்த விழிப்புணர்வு மிகவும் முக்கியமானதாகும். எனவே, தங்களால் இயன்றவரை, ஆதாரமான கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளவும், ஆன்மிகப் பாதையைக் கடைப்பிடித்த ஆன்றோர்களின் போதனைகளைக் கற்றுத் தேர்வு பெறவும், முடிந்த வரை அவற்றை தங்களது சொந்த அனுபவத்தில் கொண்டு வரவும், பகுத்தறிய வல்ல மனிதன் பாடுபடுவான்.
இறைவனை அனுபவிப்பதற்கு,படாடோபம் மற்றும்
தற்பெருமையை விட்டு விட வேண்டும்- பாபா