azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 28 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 28 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
A farmer clears and levels the land, removes the stones and thorns, ploughs and prepares the field, manures and strengthens the soil, and waters and fertilises it. Then, after sowing, transplanting, weeding, spraying and waiting, he reaps the crop. After winnowing and threshing, he stacks the corn. All these various processes are for the sake of the stomach. So too, one must feel that all hunger and thirst, joy and sorrow, grief and loss, suffering and anger, food and appetite are but impulses helping us toward attaining the presence of the Lord. When one has this attitude, sin will never tarnish these activities. The appetites will also vanish, without a vestige of name or form. On the other hand, if the appetites are treated as important, one can earn only sorrow, not joy. It will be impossible to acquire peace. All acts — wearing, eating, walking, studying, serving, moving — should be performed in a spirit of dedication to the Lord. (Prema Vahini, Ch 55)
MASTERY OF THE SENSORY DESIRES CAN’T BE LEARNT AT SCHOOLS WHERE THE
ARTS OF SUSTAINING THE BODY ARE TAUGHT SYSTEMATICALLY. - BABA
ஒரு விவசாயி நிலத்தை சுத்தப் படுத்தி, சமன் செய்து, கற்களையும், முட்களையும் நீக்கி, உழுது,தயார் செய்து,சாணியிட்டு வலுவேற்றி, நீர்பாய்ச்சி, உரமிடுகிறான். விதை விதைத்த பின்னர், நாற்று நட்டு, களையெடுத்து, மருந்து தெளித்து, காத்திருந்து அறுவடை செய்கிறான். பின்னர், அதைப் போரடித்துத் தூற்றி, தானியத்தை சேமித்து அடுக்கி வைக்கிறான். இந்த அனைத்து பலவித முறைகளும், வயிற்றிற்காகவே. அதைப் போலவே, அனைத்து பசி, தாகம், சுகம், துக்கம், துயரம் மற்றும் இழப்பு, துன்பம் மற்றும் கோபம், உணவு மற்றும் தாபம் அனைத்தும், இறைவனது சன்னிதானத்தை நோக்கி நாம் முன்னேறுவதற்கு உதவும் உந்துதல்களே என, ஒருவர் உணர வேண்டும். ஒருவருக்கு எப்போது இப்படிப் பட்ட மனப்பாங்கு இருக்கிறதோ, அப்போது, பாவம் இந்த செயல்களை ஒரு போதும் களங்கப் படுத்தாது.தாபங்களும் கூட, எந்தவிதமான ரூபமோ அல்லது நாமமோ இன்றி மறைந்து விடும். அதே சமயம், இந்த தாபங்களை முக்கியமானதாக எடுத்துக் கொண்டால், ஒருவர் கண்டிப்பாக துயரத்தைப் பெறுவாரே அன்றி சந்தோஷத்தை அல்ல. சாந்தியைப் பெறுவது என்பது இயலாததாகி விடும். உடுப்பது, உண்பது, நடப்பது, படிப்பது, சேவை செய்வது, திரிவது என்ற அனைத்து செயல்களையும், ஒரு இறையார்ப்பண உணர்வோடு செய்ய வேண்டும்.
உடலைப் பராமரிக்கும் கலையை முறையாக போதிக்கும் பள்ளிகளிலிருந்து, புலனாசைகளை வெல்வதைப் பற்றிக் கற்றுக் கொள்ள முடியாது- பாபா