azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 25 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 25 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Simply because a devotee appears like the Lord (sarupya-mukti), we cannot assume that the devotee has the powers of creation, preservation and destruction that the Lord has. Only when all traces of differences disappear and unity is attained, the highest stage is reached. This is called union (sayujya). This comes only by divine grace. The devotee aspires for this mergence (aikya). One wishes to serve the Lord as one pleases and to experience the joy of the form that one has attributed to the Lord. But the Lord, out of His grace, gives the devotee not only existence with the Lord, witnessing always the glory of the Lord, and being suffused with God-consciousness but also union (sayujya)! The path of devotion (bhakti marga) results also in attainment of knowledge of Brahman (Brahma-jnana). Even if the devotee does not crave it, the Lord Himself vouchsafes it to the devotee. Union-with-God liberation (sayujya-mukti) is also referred to as absolute liberation (ekanta-mukti). (Prema Vahini, Ch 54)
LIVE, AVOIDING EVIL DEEDS, HATEFUL AND HARMFUL THOUGHTS,
AND DON’T GET ATTACHED TO THE WORLD. - BABA
ஒரு பக்தன் இறைவனைப் போலவே தோற்றமளிப்பதால் மட்டும்(சாருப்ய முக்தி ), இறைவனுக்கு உள்ளது போல, படைக்கும், காக்கும் மற்றும் அழிக்கும் சக்திகள், அந்த பக்தனுக்கும் இருப்பதாக நாம் கருதி விடக் கூடாது. எப்போது வேற்றுமைகளின் அனைத்து சுவடுகளும் மறைந்து ஒற்றுமை பெறப் படுக்கிறதோ, அப்போது தான் மிக உயர்ந்த நிலை எட்டப் படுகிறது.இதுவே, இரண்டறக் கலத்தல் ( சாயுஜ்ய) எனப் படுகிறது. இது இறை அருளால் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது. ஒரு பக்தன் இந்த இரண்டறக் கலத்தலை (ஐக்ய) நாடுகிறான். ஒருவர், தான் விரும்பிய படி, இறைவனுக்கு சேவை ஆற்றவும், தான் இறைவனுக்கு அளித்த ரூபத்தில்லிருந்து ஆனந்தத்தைப் பெறவும் விரும்புகிறார். ஆனால், இறைவனோ, இறைவனது இருக்கை, எப்போதும் அவனது மகிமையைக் காண்பது மற்றும் இறை உணர்வில் தோய்ந்திருப்பது ஆகியவற்றை அளிப்பதோடு மட்டும் அல்லாமல், தனது கருணையின் காரணமாக, அவனுடன் இரண்டறக் கலத்தலையும் (சாயுஜ்ய) அளிக்கிறான்! பக்தியின் பாதை (பக்தி மார்க) பிரம்மத்தைப் பற்றிய அறிவைப் (ப்ரம்ம ஞானம்) பெறுவதிலும் கூட முடிகிறது. பக்தன் இதற்காக ஏங்கா விட்டாலும் கூட, இறைவன் தானே இதற்கு உத்திரவாதம் அளிக்கிறான். இறைவனோடு இரண்டறக் கலக்கும் முக்தி (சாயுஜ்ய முக்தி), முழுமையான விடுதலை ( ஏகாந்த முக்தி ) என்றும் குறிப்பிடப் படுகிறது.
தீய செயல்கள், வெறுப்பான, தீங்கு விளைவிக்கும் சிந்தனைகள் ஆகியவற்றைத் தவிர்த்து வாழுங்கள்; மேலும் உலகின் மீது பற்று வைக்காதீர்கள்- பாபா