azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 24 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 24 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

When you worship with fixity of consciousness and purity of feeling, free of all extraneous thought, that itself becomes mental union with the Divine (bhava-samadhi). As a result of this union, the Lord appears before the inner eye of the devotee in the form that the devotee has chosen for worship. The vision is not merely a matter of imagination; it is a ‘face-to-face’ experience. Without changing location, the devotee can abide in the presence of the Lord in the self-same place. This is called, ‘being always with God - salokya-mukti’. Besides being always with the Lord, devotees realise all that they see as the glory of the Lord. The experience of ‘seeing always the glory of the Lord’ is samipya-mukti. Existing ever with the Lord, witnessing always the glory of the Lord, and becoming suffused with God-consciousness is merger in the divine form - sarupya-mukti. This is the final fruit of devotional scriptures. (Prema Vahini, Ch 54)
WHEN THE MIND IS PURE, UNSELFISH AND UNWAVERING,
THE DIVINE APPEARS IN ALL HIS PURITY AND FULLNESS. - BABA
அனைத்து வெளிப்புறச் சிந்தனைகளையும் விடுத்து, ஒருமித்த விழிப்புணர்வுடனும், பரிசுத்தமான உணர்வுடனும் , நீங்கள் வழிபடும்போது, அதுவே இறைவனுடன் மனத்தளவில் இரண்டறக் கலத்தல் ( பாவ- சமாதி ) ஆகி விடுகிறது. இந்த இணைப்பின் பலனாக,பக்தன் தான் வழிபடுவதற்குத் தேர்ந்தெடுத்த ரூபத்தில், இறைவன் பக்தனின் அகக்கண் முன் தோன்றி விடுகிறான். இது வெறும் ஒரு கற்பனை அல்ல; இது, ஒரு ‘’நேருக்கு நேர்’’ அனுபவம் ஆகும். தான் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்ளாது, அந்த இடத்திலேயே பக்தன் இறைவனது சன்னிதானத்தில் இருக்க முடியும். இதுவே ‘’ இறைவனுடன் எப்போதும் இருப்பது – சாலோக்ய- முக்தி’’ எனப்படுகிறது. இறைவனுடன் எப்போதும் இருப்பதோடு அல்லாமல், தான் காண்பதெல்லாம், இறைவனது மகிமையே என்புதை பக்தர்கள் உணருகிறார்கள்.’’எப்போதும் இறைவனது மகிமையையே காண்பது‘’ என்ற அனுபவமே சாமீப்ய முக்தியாகும். இறைவனுடனேயே இருந்தும், அவனது மகிமையை எப்போதும் கண்டும், இறை உணர்வில் தோய்ந்தும் இருப்பதே தெய்வீக ரூபத்துடன் இரண்டறக் கலக்கும் சாரூப்ய முக்தியாகும். தெய்விக சாஸ்திரங்களின் இறுதிப் பலன் இதுவே.
எப்போது மனம் தூய்மையாகவும், சுயநலமற்றும், நிலைகுலையாமலும் இருக்கிறதோ, அப்போது இறைவன் தனது அனைத்து பரிசுத்தம் மற்றும் பரிபூரணத்துவத்துடன் தோன்றுகிறான். - பாபா