azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 21 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 21 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Every form conceived in the shastras and scriptures has a deep significance. In the end, all Forms merge in the Formless. Shiva is the Principle of the destruction of all names and forms, of all entities and individuals. So, the Linga is the simplest sign of emergence and mergence. Shiva does not ride an animal called in human language, a bull. The bull symbolises stability standing on the four legs - Sathya, Dharma, Shanti and Prema (Truth, Right Conduct, Peace and Love). Shiva’s three eyes represent eyes that see your past, present and future. The elephant skin which forms His cloak represents the beastial primitive traits which His grace destroys. His four faces symbolise Equanimity (Shantam), Rage (Roudram), Grace (Mangalam) and Elevating Energy (Utsaham). Resolve, on this Holy Shivaratri, in the presence of Shiva Sai, to visualise Shiva as the inner power within you and in all. (Divine Discourse, Feb 1969)
YOU MUST STRIVE TO UNFOLD THE DIVINITY WITHIN YOU AND ILLUMINE YOUR LIFE. - BABA
சாஸ்திரங்களிலும், வேதங்களிலும் உருவாக்கப் பட்ட ஒவ்வொரு இறை ரூபத்திற்கும் ஒரு ஆழ்ந்த முக்கியத்துவம் உள்ளது. இறுதியில் அனைத்து ரூபங்களும், ரூபமற்ற ஒன்றில் இரண்டறக் கலந்து விடுகின்றன. அனைத்து நாம, ரூபங்கள், அனைத்து உட்பொருட்கள் மற்றும் ஜீவன்களின் அழிப்பின் தத்துவமே சிவன்.எனவே, விங்கம் என்பது வெளிப்படுதல் மற்றும் இரண்டறக் கலத்தலின் எளிமையான சின்னமாகும். சிவன், மனித பாஷையில் கூறப்படும் ஒரு காளையின் மீது சவாரி செய்பவரல்ல. காளை என்பது, சத்யம், தர்மம், சாந்தி மற்றும் ப்ரேமை என்ற நான்கு கால்களில் நிற்கும் ஸ்திரத்தன்மையைக் குறிக்கிறது. சிவனது முக்கண்கள், உங்களது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைக் காணுகின்ற கண்களாகும். அவரது மேலங்கியாக இருக்கும் யானைத் தோல், இறைவனது அருள் அழிக்கும், நாகரீக முதிர்ச்சியற்ற மிருகப் பண்புகளைக் குறிக்கிறது. அவனது நான்கு முகங்கள், சமச்சீரான நிலை (சாந்தம்), கோபம் (ரௌத்ரம்), அருள் (மங்களம்) மற்றும் உத்வேகமளிக்கும் சக்தி (உத்ஸாகம்) ஆகியவற்றைக் குறிக்கின்றன. இந்தப் புனிதமான சிவராத்ரி அன்று, சிவ சாயின் சன்னிதியில், சிவனை, உங்கள்ளுள்ளும் மற்றும் அனைவருள்ளும் உள்ள சக்தியாகக் காண்போம் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களுள் உள்ள தெய்வீகத்தை கட்டவிழ்த்து,
உங்களது வாழ்க்கைக்கு ஒளியூட்ட நீங்கள் பாடுபட வேண்டும் - பாபா