azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 19 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 19 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
The Lord will protect in all ways and at all times those who worship Him in complete and uncontaminated devotion (bhakti) — just as a mother protects her infants, a cow saves her calf from danger, and the eyelids guard the eyes effortlessly and automatically. When the infant grows up into an adult, the mother won’t pay so much attention to its safety. So too, the Lord doesn’t pay much attention to the wise one (jnani). The devotee of form (saguna bhakta), like an infant of the Lord, has no strength except the strength of the Lord. For the realized soul (jnani), their own strength is enough. Therefore, until one can rely on one’s own strength, one must be an infant in the Lord’s Hands, as a devotee of the form, right? No one can become a devotee of the formless Supreme (nirguna bhakta) without having been a devotee of the form. (Prema Vahini, Ch 48.)
WHEN THE MIND IS PURE, UNSELFISH AND UNWAVERING,
THE DIVINE APPEARS IN ALL HIS PURITY AND FULLNESS. – BABA
எவ்வாறு ஒரு தாய் தனது பச்சிளம் குழந்தைகளைக் காக்கிறாளோ, எவ்வாறு ஒரு பசு தனது கன்றுக் குட்டியை ஆபத்திலிருந்து காக்கிறதோ, எவ்வாறு கண் இமைகள், தனிமுயற்சியின்றியும், தானாகவும் கண்களைக் காக்கின்றனவோ, அவ்வாறே, அவனை முழுமையான மற்றும் களங்கமில்லாத பக்தியுடன் வழிபடுவோரை, இறைவன் எல்லா வழிகளிலும், எக்காலத்திலும் காப்பாற்றுவான். ஒரு பச்சிளம் குழந்தை வளர்ந்து பெரியவனாகி விட்டால், தாய் அவனது பாதுகாப்பைப் பற்றி அதிகம் கவனம் செலுத்த மாட்டாள்.அதைப் போலவே, இறைவன் ஒரு ஞானியின் மீது அதிக கவனம் செலுத்த மாட்டான். இறை ரூபத்தை வழிபடும் பக்தனுக்கு(ஸகுண பக்தா), இறைவனின் குழந்தையைப் போன்று, ஆண்டவனின் சக்தியைத் தவிர வேறு எந்த சக்தியும் இருக்காது. தன்னை உணர்ந்தவருக்கோ (ஞானி) அவரது சொந்த சக்தியே போதுமானது. எனவே, ஒருவர் தனது காலிலேயே வேறூன்றி நிற்கும் சக்தி பெறும் வரை,இறை ரூபத்தை வழிபடும் பக்தனைப் போல,ஆண்டவனின் கரங்களில் ஒரு பச்சிளம் குழந்தையாக இருக்க வேண்டும் , சரிதானே? இறை ரூபத்தின் பக்தனாக (ஸகுண பக்தா) இருக்காமல், எவரும் அரூபமான பரப்பிரம்மத்தின் பக்தனாக (நிர்குண பக்தா ) ஆக முடியாது.
எப்போது மனம் தூய்மையாகவும், சுயநலமற்றும், நிலைகுலையாமலும் இருக்கிறதோ, அப்போது இறைவன் தனது அனைத்து பரிசுத்தம் மற்றும் பரிபூரணத்துவத்துடன் தோன்றுகிறான். - பாபா