azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 16 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 16 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
The demons (danavas) are those who trample on love and consider inferior qualities as important, while the humans (manavas) are those who consider love as the only quality to be fostered and inferior qualities as snakes to be destroyed. Are they humans who have no sweetness in them and who endeavour to suppress the craving for immortality? Theirs is the nature of demons, though the form is human! For, the character and not the form is primary. How can those with human form be called humans if they have no kindness and no rightness, and if they have the nature of demons? Humans engage in soft and sweet deeds of kindness, rightness, love, and truth; they are witnesses to the possibility of realising and manifesting one’s immortality. Their good nature is resplendent on their faces as bliss (ananda). Without goodness, even if one is infatuated with joy, the faces will indicate only the destructive fire of the demon; it will not shine with the grace of spiritual bliss. -Prema Vahini, Ch 47.
NISHKAMA KARMA (DESIRELESS ACTION) DEMONSTRATES AND PROMOTES THE LOVE PRINCIPLE. - BABA
ப்ரேமையை நசுக்கி, கீழ்த்தரமான குணங்களை முக்கியமானவை எனக் கருதுபவர்களே அரக்கர்கள் (தானவாஸ்); அதே சமயம் பேண வேண்டிய குணம் ப்ரேமை ஒன்றே என்றும் கீழ்த்தரமான குணங்கள் அழிக்கப் பட வேண்டிய பாம்புகள் என்றும் கருதுபவர்களே மனிதர்கள் (மானவாஸ்). தங்களுள் இனிமை இன்றியும், அமரத்துவத்திற்கான ஏக்கத்தை அடக்கவும் விழைபவர்கள் மனிதர்களா? அவர்களது உருவம் மனிதராக இருந்தாலும், அவர்களின் இயல்பு அரக்கர்களுடையதே! ஏனெனில், குணாதிசியம் ப்ரதானமே அன்றி, உருவம் அல்ல. பரிவும், தர்மமும் இன்றி, அரக்கர்களின் இயல்பைக் கொண்டிருந்தால், மனித உருவில் இருக்கும் அவர்களை, மனிதர்கள் என்று எவ்வாறு கூற முடியும்? மனிதர்கள், கனிவு, தர்மம், ப்ரேமை மற்றும் சத்தியம் நிறைந்த இதமான, இனிமையான செயல்களில் ஈடுபடுபவர்கள்; ஒருவர் தனது அமரத்துவத்தை உணர்ந்து, வெளிப்படுவதற்கான சாத்தியக் கூறுகளுக்கு, அவர்கள் சாட்சிகளாக இருப்பவர்கள். அவர்களது நல்ல தன்மை, அவர்களது முகங்களில் ஆனந்தம் என ஒளி விட்டுத் திகழும். நல்ல தன்மை இன்றி, ஒருவர் சந்தோஷத்தால் மயங்கி இருந்தாலும் கூட, அவர்களது முகங்கள் அரக்கர்களின் அழிவுத் தீயையே எடுத்துக் காட்டும்; அது ஆன்மிக ஆனந்தத்தின் கிருபையால் பிரகாசிக்காது.
நிஷ்காம கர்மா ( ஆசையற்ற செயல்), ப்ரேம தத்துவத்தை
எடுத்துக் காட்டி, பேணிக் காக்கிறது- பாபா