azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 14 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 14 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Love can conquer anything. Selfless, pure, unalloyed love leads the human being to God. Selfish and constricted love binds one to the world. Unable to comprehend the pure and sacred love, human beings today are prey to endless worries because of attachment to worldly objects. One’s primary duty is to understand the truth about the Love Principle. Once a person understands the nature of love, he or she will not go astray. The various contexts in which the word love is used today have no relation to the true meaning of love. The affection, between a mother and child or between a husband and wife is incidental to a certain temporary relationship and is not real love at all. True love has neither a beginning nor an end. It exists in all the three categories of time—past, present and future. That alone is true love which can fill the human being with enduring bliss. (Divine Discourse Dec 25, 1995)
GOD IS LOVE – LIVE IN LOVE. - BABA
ப்ரேமை எதையும் வெல்ல வல்லது. தன்னலமற்ற, பரிசுத்தமான, அப்பழுக்கற்ற ப்ரேமை, மனிதனை இறைவன் பால் இட்டுச் செல்கிறது. சுயநலமான, குறுகிய ப்ரேமை ஒருவரை உலகோடு பிணைத்து விடுகிறது. பரிசுத்தமான மற்றும் புனிதமான ப்ரேமையைப் புரிந்து கொள்ள இயலாது, உலகியலான பொருட்களின் மீது கொண்ட பற்றுதலினால், மனிதர்கள் இன்று முடிவே இல்லாத கவலைகளுக்கு ஆளாகிறார்கள். ப்ரேம தத்துவத்தின் சத்தியத்தைப் புரிந்து கொள்வது ஒருவரின் பிரதான கடமையாகும். ஒருமுறை ஒரு மனிதர் ப்ரேமையின் இயல்பைப் புரிந்து கொண்டு விட்டால், அவனோ அல்லது அவளோ வழி தவறி செல்ல மாட்டார்கள். இன்று பல சந்தர்ப்பங்களில், பயன்படுத்தப்படும் ப்ரேமை என்ற வார்த்தைக்கு, ப்ரேமையின் உண்மையான அர்த்தத்தோடு எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு தாய்க்கும், குழந்தைக்கும் அல்லது ஒரு கணவன், மனைவிக்கும் இடையே உள்ள பாசம் ஒரு தாற்காலிக உறவின் தற்செயலான நிகழ்வே அன்றி, உண்மையான ப்ரேமையே அல்ல. உண்மையான ப்ரேமைக்கு ஒரு ஆரம்பமோ அல்லது முடிவோ கிடையாது. அது முக்காலங்களிலும், கடந்த, நிகழ் மற்றும் எதிர்காலங்களிலும் இருப்பதாகும். மனிதனை நிரந்தரமான ஆனந்தத்தால் எது நிரப்புமோ, அது மட்டுமே உண்மையான ப்ரமையாகும்.
ப்ரேமையே தெய்வம், ப்ரேமையில் வாழுங்கள். - பாபா