azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 13 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 13 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
If you wear blue eyeglasses, you see only blue, even though nature is resplendent with many colours, right? If the world appears to you as with differences, that is due only to the fault in you. If all appears as one love, that too is only your love. For both of these, the feeling in you is the cause. It is only because you have faults within you that you see the world as faulty. When there is no knowledge of fault in yourself, no fault can be found even by search, for you wouldn’t know which are the faults. Now, the question may arise whether the Lord Himself has faults because He also searches for faults. But how can it be said that the Lord searches for faults? He searches only for goodness, not for faults and sins. The Lord won’t examine the wealth, family, caste, status, or sex. He sees only the righteousness (sadbhava). He considers those endowed with such righteousness as deserving His grace, whoever they are, whatever they are. (Prema Vahini, Ch 46)
LIVE, AVOIDING EVIL DEEDS, HATEFUL AND HARMFUL THOUGHTS,
AND DON’T GET ATTACHED TO THE WORLD. - BABA
நீங்கள், நீல வண்ணக் கண்ணாடி அணிந்திருந்தால், இயற்கை பல வண்ணங்களில் ஒளி விட்டுத் திகழ்ந்தாலும், நீங்கள் நீல வண்ணத்தையே காண்பீர்கள், சரிதானே? இந்த உலகம் உங்களுக்கு வித்தியாசங்களுடன் காணப்பட்டால், அது உங்களுள் உள்ள தவறின் காரணத்தால் மட்டுமே. அனைத்தும் ஒரே ப்ரேமையாகத் தோன்றினால், அதுவும் கூட உங்களின் ப்ரேமையே. இந்த இரண்டிற்கும் உங்களுள் உள்ள உணர்வே காரணம். உங்களுள் குறைகள் இருப்பதனால் தான் நீங்கள் இந்த உலகமும் குறையுள்ளதாகக் காண்கிறீர்கள். உங்களுள் உள்ள குறையைப் பற்றிய அறிவு இல்லை என்றால், தேடினாலும் கூட எந்தக் குறையையும் கண்டு பிடிக்க முடியாது, ஏனெனில் எதெல்லாம் குறை என்றே உங்களுக்கே தெரியாது. இப்போது, அவனும் கூட குறைகளைத் தேடுவதால்,இறைவனிடமே குறைகள் உள்ளனவா என்ற கேள்வி எழக் கூடும். ஆனால், இறைவன் குறைகளைத் தேடுகிறான் என்று எவ்வாறு கூற முடியும்? அவன் நல்லவற்றை மட்டுமே தேடுகிறானே அன்றி, குறைகளையோ, பாவங்களையோ அல்ல. இறைவன் செல்வம், குடும்பம், ஜாதி, அந்தஸ்து அல்லது இனம் ஆகியவற்றை ஆராய்வதில்லை. அவன் பார்ப்பதெல்லாம் நல்லுணர்வை ( ஸத்பாவ) மட்டுமே. இப்படிப் பட்ட நல்லுணர்வு படைத்தவர்கள் யாராயினும், எங்கு இருந்தாலும், அவர்கள் அவனது அருளுக்குப் பாத்திரமானவர்கள் என்றே அவன் கருதுகிறான்.
தீய செயல்கள், வெறுப்பான, தீங்கு விளைவிக்கும் சிந்தனைகள் ஆகியவற்றைத் தவிர்த்து வாழுங்கள்; மேலும் உலகின் மீது பற்று வைக்காதீர்கள்- பாபா