azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 05 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 05 Feb 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Everything is suffused with love. So we can unhesitatingly declare that the Supreme Lord is the embodiment of love. In the entire creation, in all living things, love manifests itself in various forms. Though it is known under different names like love for offspring, affec¬tion, devotion to God, desire (vatsalya, anuraga, bhakti, ishtam) etc., according to the direction in which it is canalised, the nature of love does not change. Whatever be the form, the essence of love is unaltered. Based on this knowledge and experience, you must clearly conclude that the supreme Lord is the inner Atma of all created things (Sarva-bhootha-antar-atma). That which teaches the highest knowledge of this unity is known as nondualism (advaita); that which teaches the principle of the lover and the Loved, the individual (jiva) and the Brahman, is known as dualism (dvaita); that which teaches about all three - love, lover, and loved - or the nature (prakriti), jiva, and Brahman, is known as qualified nondualism (vishishta-advaita). But these three are one. (Prema Vahini, Ch 38)
ALL ARE ONE, BE ALIKE TO EVERYONE. - BABA
அனைத்தும் ப்ரேமையில் தோய்ந்தவையே. எனவே, நாம் தயக்கம் இன்றி, பரமாத்மாவை ப்ரேமையின் திருவுருவம் என பறைசாற்றலாம். படைப்பு அனைத்திலும், அனைத்து ஜீவராசிகளிலும், ப்ரேமை தன்னை பல ரூபங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது. அது செலுத்தப்படும் திசையைப் பொறுத்து, வெவ்வேறு பெயர்களில், அதாவது, சந்ததிகளிடம் அன்பு, பரிவு, இறைவனிடம் பக்தி, ஆசை (வாத்ஸல்யம், அனுராகம், பக்தி, இஷ்டம்) என அது அறியப்பட்டாலும், ப்ரேமையின் இயல்பு மாறுவதில்லை. ரூபம் எதுவாக இருந்தாலும், ப்ரேமையின் சாராம்சம் மாறுவதில்லை.இந்த அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், பரமாத்மாவே, படைக்கப் பட்ட அனைத்து ஜீவராசிகளின் உள்ளார்ந்த ஆத்மா ( ஸர்வ-பூத-அந்தர்-ஆத்மா) என நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒருமையின் மிக உயர்ந்த அறிவைப் புகட்டுவதே அத்வைதம் எனப்படுகிறது; நேசிக்கப்படுவர் மற்றும் நேசிப்பவர், அதாவது தனிமனிதன் (ஜீவ) மற்றும் பரமாத்மாவின் தத்துவத்தைப் புகட்டுவது த்வைதம் எனப்படுகிறது; ப்ரேமை, ப்ரேமிக்கப் படுபவர், ப்ரேமிப்பவர் அல்லது இயற்கை, ஜீவன் மற்றும் ப்ரம்மன் என்ற மூன்றையும் பற்றிப் போதிப்பது விசிஷ்டாத்வைதம் எனப்படுகிறது. ஆனால், இவை மூன்றும் ஒன்றே.
அனைவரும் ஒன்றே. அனைவரிடம் ஒன்று போல நடந்து கொள்ளுங்கள் - பாபா