azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 31 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 31 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Twenty hammer strokes might not succeed in breaking a stone, but the twenty-first stroke might break it. Does that mean that twenty blows were of no avail? No! Each contributed its share to the final success; the last result was the cumulative effect! So too, the mind is engaged in a struggle with the world, both internal and external. Needless to say, success might not always be your lot. You’ll certainly attain everlasting bliss by immersing in good works and saturating your mind with love for God. Infuse every moment of life with love. Then, evil tendencies will not hamper your path. If your mind always dwells with the Lord, you will be drawn towards good deeds. The objective of all spiritual practice is destruction of the mind, and some day, one good deed will succeed in destroying it, like the twenty-first blow! All good deeds done in the past contribute to this triumph; no noble deed is unworthy, every little act counts! (Prema Vahini, Ch 28)
AN OUNCE OF PRACTICE IS WORTH MORE THAN A TON OF PREACHING. - BABA
இருபது சம்மட்டி அடிகள் ஒரு பாறையை உடைக்க முடியாமல் போகலாம்; ஆனால், இருபத்து ஓராவது, அடி அதை உடைக்கக் கூடும். இதனால், அந்த இருபது அடிகளும் வீணானவை என்றா பொருள்? இல்லையே! ஒவ்வொன்றும், இறுதி வெற்றிக்கு, தங்கள் பங்கை ஆற்றியுள்ளன; இறுதி முடிவு, அனைத்து அடிகளின் ஒட்டு மொத்த முயற்சியின் விளைவே! அதைப் போலவே, அகத்திலும், புறத்திலும், உலகத்தின் உடனான ஒரு போராட்டத்தில், மனம் ஈடுபட்டுள்ளது. வெற்றி எப்போதுமே உங்களுடையதாக இருக்காது என்பதைக் கூறத் தேவையில்லை. நற்செயல்களில் மூழ்கி, உங்கள் மனதை இறைவன் பால் கொண்ட ப்ரேமையால் தோய்ந்திருக்கச் செய்வதன் மூலம், நீங்கள் கண்டிப்பாக நிரந்தர ஆனந்தத்தை அடைவீர்கள். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் ப்ரேமையைப் புகுத்துங்கள். பின்னர், தீய உந்துதல்கள் உங்கள் பாதைக்குத் தடையாக இருக்காது. உங்கள் மனம் எப்போதும் இறைவன் பால் திளைத்திருக்குமானால், நீங்கள் நற்செயல்களை நோக்கியே ஈர்க்கப் படுவீர்கள். அனைத்து ஆன்மிக சாதனைகளின் நோக்கம் மனதை அழிப்பதே; என்றாவது ஒரு நாள், அந்த இருபத்து ஓராவது சம்மட்டி அடியைப் போல, ஒரு நற்செயல், அதை அழிப்பதில் வெற்றி பெற்று விடும்! கடந்த காலத்தில் செய்த அனைத்து நற்செயல்களும் இந்த வெற்றிக்கு தமது பங்கை அளிக்கின்றன; எந்த உன்னத செயலும் தகுதியற்றது அல்ல, ஒவ்வொரு சிறிய செயலும் மதிப்புள்ளதே!
ஒரு துளி அளவு கடைப்பிடித்தல், ஒரு மலை அளவு போதனையை விட ,
அதிக மதிப்பு வாய்ந்ததாகும் - பாபா