azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 30 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 30 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Life is eternally stalked by death. Yet, people don’t tolerate the very mention of the word “death”. It is deemed inauspicious to hear that word, though, however insufferable it is, every living thing is every moment proceeding nearer and nearer to it. Intent on a journey and having purchased a ticket for the same, when you enter a train, the train takes you willy-nilly to the destination, whether you sit quiet or lie down or read or meditate. So too, each living thing received a ticket to death at birth and has come on a journey; so whatever your struggles, safeguards and precautions, the place has to be reached some day. Anything else may be uncertain, but death is certain. It is impossible to change that law. People have taught the eye, ear and tongue the luxury of constant novelty. Now, the opposite tendencies have to be taught. The mind has to be turned towards the good; the activities of every minute have to be examined from that standpoint. (Prema Vahini, Ch 27)
EACH DEED IS A CHISEL STROKE SHAPING THE ROCK OF YOUR PERSONALITY. THEREFORE,
EVEN THE TINIEST OF ACTS HAS TO BE DONE WITH GREAT CARE AND DEVOTION. - BABA
வாழ்க்கை, நிரந்தரமாக மரணத்தால் தொடரப் பட்டு வருகிறது. இருந்தாலும், மக்கள், ‘’ மரணம் ‘’ என்ற வார்த்தையைச் சொல்வதைக் கூடச் சகித்துக் கொள்வதில்லை. அந்த வார்த்தையைக் கேட்பதே அமங்களமாகக் கருதப்படுகிறது; எவ்வளவு தான் தாங்க முடியாத ஒன்றாக அது இருந்தாலும் கூட, ஒவ்வொரு ஜீவராசியும், ஒவ்வொரு தருணமும், அதற்கு மேலும் மேலும் அருகில் நெருங்கிக் கொண்டே சென்று கொண்டு தான் இருக்கிறது. ஒரு பிரயாணம் செய்ய முற்பட்டு,அதற்கான ஒரு பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு நீங்கள் ரயிலில் நுழைந்த பின், நீங்கள் அமைதியாக உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ அல்லது படித்துக் கொண்டோ அல்லது தியானம் செய்து கொண்டோ இருந்தாலும், அது உங்களை, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, சேர வேண்டிய இடத்திற்கு இட்டுச் செல்கிறது. அதைப் போலவே, ஒவ்வொரு ஜீவ ராசியும், பிறப்பிலேயே, ஒரு மரணச்சீட்டை வாங்கிக் கொண்டு பயணிப்பதற்கு வந்துள்ளது; எனவே, உங்களது போராட்டங்கள்,பாதுகாப்புகள், தற்காப்புக்கள் எதுவாக இருந்தாலும், ஏதோ ஒருநாள் அந்த இடத்தை அடைந்தே ஆக வேண்டும். எது வேண்டுமானாலும் நிச்சயமற்றதாக இருக்கலாம், ஆனால் மரணம் நிச்சயம். அந்தச் சட்டத்தை மாற்றுவது சாத்தியமல்ல. மக்கள், கண், காது மற்றும் நாக்கிற்கு இடையறாத நவீனங்களை ஊட்டி வந்து உள்ளார்கள். இப்போது, அவற்றிற்கு நேர்மாறான உந்துதல்களை கற்பித்தாக வேண்டும். நல்லவற்றை நோக்கி, மனதைத் திருப்ப வேண்டும்; ஒவ்வொரு நிமிடத்தின் செயல்களையும், அந்தக் கண்ணோட்டத்தில் இருந்து ஆராய வேண்டும்.
ஒவ்வொரு செயலும், உங்களது ஆளுமை எனும் பாறையை
வடிவமைக்கும் உளி அடிகளாகும். எனவே, மிகச் சிறிய செயலைக் கூட
மிகுந்த கவனத்துடனும்,பக்தியுடனும் ஆற்ற வேண்டும்- பாபா