azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 29 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 29 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Always keep death, which is inevitable, before the eye of memory and engage yourself in the journey of life with good wishes for all, with strict adherence to truth, seeking always the company of the good, and with the mind always fixed on the Lord. Live, avoid evil deeds and hateful and harmful thoughts, and don’t get attached to the world. If you live thus, your last moment will be pure, sweet, and blessed. Disciplined striving throughout life is needed to ensure this consummation. The mind has to be turned over to good mental tendencies (samskaras). Everyone must examine themselves rigorously, spot defects, and struggle to correct them. When people uncover and realise their own defects, it is like being reborn. People then start anew, from a new childhood. This is the genuine moment of awakening. (Prema Vahini, Ch 27)
தவிர்க்க முடியாததான மரணத்தை, எப்போதும் மனக்கண் முன் வைத்துக் கொண்டு, அனைவருக்கும் நல்லவற்றையே விரும்பி, சத்தியத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு, எப்போதும் நல்லவர்களின் நட்பு வட்டத்தையே நாடி, மனதை எப்போதும் இறைவன் பால் நிலை கொள்ளச் செய்து கொண்டு, உங்களை நீங்களே வாழ்க்கைப் பாதையில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். தீய செயல்களையும்,வெறுப்பான மற்றும் தீங்கு விளைவிக்கும் சிந்தனைகளையும் தவிர்த்து, உலகின் மீது பற்று வைக்காமல், வாழுங்கள்.நீங்கள் இப்படி வாழ்ந்தால், உங்களது இறுதித் தருணம் பரிசுத்தமானதாகவும், இனிமையானதாகவும், ஆசீர்வதிக்கப் பட்டதாகவும் இருக்கும். வாழ்க்கை முழுவதிலும் கட்டுப்பாடான முயற்சி, இந்த முழுமையை உறுதி செய்யத் தேவையாகிறது. நல்ல அக உந்துதல்களை (ஸம்ஸ்காரங்கள்) நோக்கி மனம் திருப்பப் பட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களையே தீவிரமாகப் பரிசோதித்து, குறைகளைக் கண்டறிந்து, அவற்றைத் திருத்திக் கொள்ளப் பாடுபட வேண்டும். மனிதர்கள் தங்களது சொந்தக் குறைகளை கண்டறிந்து. உணரும்போது, அதுவே மறு பிறவி எடுத்ததற்கு ஒப்பாகும். மனிதர்கள் பின்னர், ஒரு புதிய குழந்தைப் பருவத்திலிருந்து, புதுவாழ்வைத் தொடங்குவார்கள். இதுவே உண்மையான விழிப்புணர்வுத் தருணமாகும்.