azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 26 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 26 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
For some ailments medicines are prescribed for external application while for others, they are given for internal use. But for this universal ailment of the cycle of birth and death (bhava-roga), listening to spiritual discourses (sravana), singing God’s name (kirtana), and other medicines are prescribed for external and internal use. One has to utter as well as hear the Lord’s name. God has equal affection toward all His children just like the nature of light is to shed illumination on all. Utilising that illumination, some can read good books and others can do their daily tasks, whatever they are. So too, uttering God’s name, one can progress in the realisation of God, another can even do wicked deeds! It all depends on how you use the light. But the Lord’s name is without blemish, always and forever. (Prema Vahini, Ch 21)
CONSIDER ALL YOUR ACTS AS WORSHIP. DUTY IS GOD, WORK IS WORSHIP. WHATEVER HAPPENS ACCEPT IT GLADLY AS HIS HANDIWORK, A SIGN OF HIS COMPASSION. - BABA
சில நோய்களுக்கு மருந்துகள் வெளிப்புறத்தில் உபயோகிப்பதற்கு பரிந்துரைக்கப் படுகின்றன; அதே சமயம் மற்றவைகளுக்கு, அவை உட்புறத்தில் பயன்படுத்த அளிக்கப் படுகின்றன. ஆனால், இந்த பிரபஞ்ச மயமான நோயான பிறப்பு மற்றும் இறப்பு என்ற சுழற்சிக்கு (பவ ரோக), ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்பது (ஸ்ரவணம்), இறைவனது திருநாமத்தைப் பாடுவது (கீர்த்தனம்) மற்றும் பல மருந்துகள் அகத்திற்கும், புறத்திற்கும் பரிந்துரைக்கப் படுகின்றன. ஒருவர் இறைவனது திருநாமத்தைக் கூறுவதோடு அல்லாமல், கேட்கவும் வேண்டும். ஒளியின் இயல்பு எவ்வாறு அனைத்திற்கும் வெளிச்சத்தைப் பொழிவதோ, அவ்வாறே இறைவனும் அவனது அனைத்து குழந்தைகளின் மீதும் சமமான பாசம் கொண்டவன்.அந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி, சிலர் நல்ல புத்தகங்களைப் படிக்கலாம், மற்றவர்கள் அவை எதுவாக இருந்தாலும், அவர்களது அன்றாட கடமைகளை ஆற்றலாம். அதைப் போலவே, இறை நாமத்தை உச்சரித்துக் கொண்டு, ஒருவர் இறைவனை உணர்தலை நோக்கி முன்னேறலாம்; மற்றொருவர் தீய செயல்களைக் கூடச் செய்யலாம்! அது, நீங்கள் வெளிச்சத்தை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஆனால், இறைவனது திருநாமம், என்றும், எக்காலத்திலும் களங்கமற்றது.
உங்கள் செயல்கள் அனைத்தையும் வழிபாடாகக் கருதுங்கள். கடமையே கடவுள். உழைப்பே வழிபாடு. எது நடந்தாலும், அதை இறைவனது செயல் மற்றும் அவனது கருணையின் ஒரு சின்னமாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்- பாபா