azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 23 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 23 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Some aspirants are so frightened by troubles, losses, and difficulties to even begin their spiritual endeavor, and so remain aloof. Some devotees, after undertaking the spiritual journey and travelling some distance, are depressed and defeated by obstacles and disappointments and give up in the middle. Yet others steadfastly adhere to the spiritual path with calmness and courage, whatever the nature of the travail, however hard the road - these are of the highest type. You may be deluded by attachment to this illusory world and attracted by temporal joy, but never barter away the means to achieve permanent and complete happiness. Carry on your spiritual duties with full devotion. God cannot be experienced without faith and steadfastness. The Lord comes only through supreme devotion (para-bhakti); supreme devotion comes only through spiritual wisdom (jnana); spiritual wisdom comes only through faith (shraddha); and faith comes only through love (prema). (Prema Vahini, Ch 18)
A PEACEFUL MIND IS THE ABODE OF LOVE. - BABA
கஷ்டங்கள், நஷ்டங்கள் மற்றும் இடர்பாடுகளைக் கண்டு பயந்து விடும் சில சாதகர்கள், தங்கள் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கக் கூட இல்லாமல், ஒதுங்கி விடுகிறார்கள். சில பக்தர்கள், ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டு, சிறிது தூரம் சென்ற பின், தடைகள் மற்றும் ஏமாற்றங்களால் மனம் துவண்டும், தோல்வி அடைந்தும், நடுவிலேயே விட்டு விடுகிறார்கள். இருந்தாலும், மற்றவர்கள், விடாமல் அமைதியாகவும், தைரியமாகவும், எப்படிப் பட்ட துன்பமானாலும், பாதை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், ஆன்மிகப் பாதையைப் பற்றி ஒழுகிறார்கள் - இவர்களே மிக உயர்ந்த வகையைச் சேர்ந்தவர்கள். நீங்கள், மாயையான இந்த உலகத்தின் மீதுள்ள பற்றுதலினால் ஏமாற்றப் பட்டும், தாற்காலிகமான சந்தோஷத்தால் ஈர்க்கப்பட்டும் இருக்கக் கூடும்; ஆனால், ஒருபோதும் நிரந்தரமான மற்றும் பரிபூரண ஆனந்தத்தை அடையும் வழியை மாற்றிக் கொண்டு விடாதீர்கள். உங்களது ஆன்மிகக் கடமைகளை முழுமையான பக்தியுடன் ஆற்றுங்கள். நம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இன்றி, இறைவனை உணர முடியாது. இறைவன் தலைசிறந்த பக்தியின் (பர பக்தி) மூலமே வருகிறான்; தலைசிறந்த பக்தி, ஆன்மிக அறிவின் (ஞானம்) மூலமே வருகிறது; ஆன்மிக அறிவு நம்பிக்கையின் (சிரத்தா) மூலமே வருகிறது; நம்பிக்கை , அன்பின் (ப்ரேமை) மூலமே வருகிறது.
ஒரு அமைதியான மனமே அன்பின் இருப்பிடம் ஆகும். - பாபா