azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 21 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 21 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
If the I-consciousness produces the pride “I know all”, a fall is inevitable; this delusion causes death. The secret of salvation lies in the realisation of this danger; rebirth is inevitable if this danger is not averted. Aware of all this, if you get immersed in spiritual practice, then the world and its worries will not affect you. It is only when you are far from this truth that you suffer, feel pain, and experience travail. At a distance from the bazaar, one hears only a huge indistinct uproar. But as one approaches it and walks into it, one can clearly distinguish the separate bargainings. So too, until the reality of the Supreme (Paramatma) is known to you, you are overpowered and stunned by the uproar of the world; but once you enter deep into the realm of spiritual endeavour, everything becomes clear and the knowledge of the reality awakens within you. Until then, you will be caught up in the meaningless noise of argumentation, disputation and exhibitionist flamboyance. (Prema Vahini, Ch 16)
AVOID HATING, ENVYING OR EVEN DISLIKING ANYONE.
PRACTICE SELFLESS LOVE THROUGH ACTS OF GENUINE SERVICE. - BABA
நான் என்ற உணர்வு "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற கர்வத்தை உருவாக்குமானால், ஒரு வீழ்ச்சி தவிர்க்க முடியாததே ; இந்த மாயை மரணத்தை எற்படுத்துகிறது.இந்த அபாயத்தை உணருவதில் தான் முக்திக்கான ரகசியம் இருக்கிறது; இந்த அபாயம் தடுக்கப் படவில்லை என்றால், மறு பிறப்பு தவிர்க்க முடியாததாகும். இதை எல்லாம் உணர்ந்து, நீங்கள் ஆன்மிக சாதனையில் மூழ்கி இருப்பீர்களானால், பின்னர், இந்த உலகமும், அதன் கவலைகளும் உங்களை பாதிக்காது. இந்த சத்தியத்திலிருந்து நீங்கள் வெகு தூரம் விலகி இருப்பதனால் தான், நீங்கள் கஷ்டப்பட்டு, வலியை உணர்ந்து,துன்பத்தை அனுபவிக்கிறீர்கள். சந்தையிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் போது, ஒருவர், ஒரு பெரிய தெளிவற்ற சலசலப்பை மட்டுமே கேட்கிறார். ஆனால் அதை நெருங்கி, உள்ளே நடந்து சென்ற பின், ஒருவர், தனித்தனியான பேரங்கள் பேசப் படுவதைத் தெளிவாக வேறுபடுத்தி அறிய முடிகிறது. அதைப் போலவே, பரமாத்மாவின் உண்மை நிலை உங்களுக்குத் தெரியும் வரை, உலகின் அமளிகளால், நீங்கள் ஆக்ரமிக்கப் பட்டுத் திகைத்துப் போய் விடுகிறீர்கள்; ஆனால், ஒருமுறை நீங்கள் ஆன்மிக சாதனையில் ஆழமாக இறங்கி விட்டால், அனைத்தும் தெளிவாகி, உண்மை நிலையைப் பற்றிய ஞானம் உங்களுள்ளேயே விழித்துக் கொள்கிறது. அது வரை நீங்கள், விவாதம், தகராறு மற்றும் படாடோப டாம்பீகம் ஆகியவற்றின் அர்த்தமற்ற கூச்சலில் சிக்கிக் கொண்டு தான் இருப்பீர்கள்.
எவரையும் வெறுப்பதையோ, அவரைக் கண்டு பொறாமைப் படுவதையோ, ஏன் அவரைப் பிடிக்காமல் இருப்பதையோ கூடத் தவிர்த்து விடுங்கள். உண்மையான சேவையின் மூலம், தன்னலமற்ற ப்ரேமையைக் கடைப்பிடியுங்கள் - பாபா