azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 20 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 20 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Mere punditry is of no use at all; the Vedas, the Upanishads and the scriptures are doctrines for living out in daily practice. Without this practice, whatever be the wealth of words or the standard of scholarship, it is all a colossal waste. To bring these teachings into one’s actual life, one has to scotch the feeling “I know”, open one’s eyes to the real essence, and introspect on it. Then one can attain bliss, without fail. The almanac might indicate that it will rain ten units of water, but even if the calendar is folded ten times and squeezed, not a drop of water can be extracted. The purpose of the calendar is not to give rain but only to give information about it. So too, the scriptures can give only information about doctrines, axioms, rules, regulations, and duties. They give instruction in the methods of attaining peace and liberation. But they aren’t saturated with these essences of bliss. One has to discover the path, direction, and goal as described in them; then, one has to tread the path, follow the direction, and reach the goal. (Prema Vahini, Ch 16)
THERE IS NO GREATER SPIRITUAL PATH THAN THE PATH OF LOVE. - BABA
வெறும் பாண்டித்யம் எதற்கும் உதவாது; வேதங்கள், உபநிஷதங்கள் மற்றும் சாஸ்திரங்கள் அன்றாட வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டிய சித்தாந்தங்கள். இந்தப் பயிற்சி இன்றி, வார்த்தைகளின் வளம் அல்லது பாண்டித்யத்தின் தரம் எப்படி இருந்தாலும், அவை அனைத்தும் ஒரு மாபெரும் விரயமே. இந்த போதனைகளை ஒருவரது வாழ்க்கையில் கொண்டு வருவதற்கு, ஒருவர், ‘’ எனக்குத் தெரியும் ‘’ என்ற உணர்வை நீக்கி, தனது கண்களை உண்மையான சாரத்தைக் காணச் செய்து, அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பின்னர் ஒருவர் நிச்சயமாக பேரானந்தத்தை அடைவார். பஞ்சாங்கம் இன்று பத்து அளவு மழை பொழியும் என்று சுட்டிக் காட்டலாம்; ஆனால், நாள்காட்டியைப் பத்து மடங்கு மடித்துப் பிழிந்தாலும், ஒரு சொட்டுநீரை அதிலிருந்து எடுக்க முடியாது. நாள்காட்டியின் குறிக்கோள் மழையை அளிப்பதல்ல; அதைப் பற்றிய தகவலை அளிப்பதே. அதைப் போலவே, கோட்பாடுகள்,சித்தாந்தங்கள், விதிகள், ஒழுங்கு முறைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றைப் பற்றிய தகவலை மட்டுமே, மறைநூல்கள் அளிக்க முடியும். சாந்தி மற்றும் மோக்ஷத்தை அடைவதற்கான வழிகளைப் பற்றிய அறிவுரைகளை அவை வழங்குகின்றன.ஆனால், அவை, இந்த ஆனந்தத்தின் சாரத்தில் தோய்ந்தவை அல்ல. ஒருவர் அவற்றில் விவரிக்கப் பட்டுள்ள பாதை, திசை மற்றும் குறிக்கோளைக் கண்டறிய வேண்டும்; பின்னர் ஒருவர் அந்தப் பாதையில் சென்று, திசையைப் பின்பற்றி, குறிக்கோளை அடைய வேண்டும்.
ப்ரேமையின் பாதையை விடச் சிறந்த ஆன்மிகப் பாதை வேறு எதுவும் இல்லை- பாபா