azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 19 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 19 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
A person who is a genuine vehicle of power can be recognised by the characteristics of truth, kindness, love, patience, forbearance and gratefulness. Wherever these reside, ego (ahamkara) cannot subsist; it has no place. Therefore seek to develop these virtues. The effulgence of the Divine Self (Atma) is obscured by ego. Therefore when ego is destroyed, all troubles end, all discontents vanish and bliss is attained. Just as the sun is obscured by mist, the feeling of ego hides eternal bliss. Even if the eyes are open, a piece of cloth or cardboard can prevent vision from functioning effectively and usefully. So too, the screen of selfishness prevents one from seeing God, who is, in fact, nearer than anyone and anything else in the Universe. (Prema Vahini, Ch 15)
CONSIDER ALL YOUR ACTS AS WORSHIP. DUTY IS GOD, WORK IS WORSHIP. WHATEVER HAPPENS ACCEPT IT GLADLY AS HIS HANDIWORK, A SIGN OF HIS COMPASSION. - BABA
சக்தியின் உண்மையான வாகனமாகத் திகழும் ஒருவரை, சத்யம், கனிவு, ப்ரேமை, பொறுமை, சகிப்புத் தன்மை மற்றும் நன்றியுணர்வு போன்ற குணாதிசியங்களால் இனம் கண்டு கொள்ளலாம். இவை எங்கு குடி கொண்டுள்ளனவோ, அங்கு அஹங்காரம் வாழ முடியாது, அதற்கு அங்கு இடமில்லை. எனவே, இந்த நற்குணங்களை அபிவிருத்தி செய்து கொள்வதை நாடுங்கள். ஆத்மாவின் பேரொளி, அஹங்காரத்தால் மறைக்கப் பட்டு விடுகிறது. எனவே, அஹங்காரம் அழிக்கப் பட்டு விடும்போது, அனைத்து கஷ்டங்களும் முடிவடைந்து விடுகின்றன, அனைத்து அதிருப்திகளும் மறைந்து விடுகின்றன, ஆனந்தம் கிடைத்து விடுகிறது. எவ்வாறு மூடுபனி, சூரியனை மறைக்கிறதோ, அவ்வாறே, அஹங்கார உணர்வு, நிரந்தரமான ஆனந்தத்தை மறைத்து விடுகிறது. கண்கள் திறந்து இருந்தாலும் கூட, ஒரு துண்டுத் துணியோ அல்லது ஒரு அட்டையோ பார்வையைத் திறம்படவும், பயனுள்ளதாகவும் செயல்படுவதிலிருந்து தடுத்து விட முடியும். அதைப் போலவே, சுயநலத்தின் திரை, எவரையும், எதையும் விடவே, உண்மையில் இந்த பிரபஞ்சத்தில் மிக அருகாமையில் இருக்கும் இறைவனைக் காண்பதிலிருந்து, ஒருவரைத் தடுத்து விடுகிறது.
உங்கள் செயல்கள் அனைத்தையும் வழிபாடாகக் கருதுங்கள். கடமையே கடவுள். உழைப்பே வழிபாடு. எது நடந்தாலும், அதை இறைவனது செயல் மற்றும் அவனது கருணையின் ஒரு சின்னமாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். - பாபா