azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 18 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 18 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
People develop in them an abounding variety of selfish habits and attitudes, causing great discontent for themselves. The impulse for all this comes from the greed for accumulating authority, domination and power. The greed for things can never be eternal and full. In fact, it is impossible to attain the level of satiation. A person might feel elated to become the master of all arts, owner of all wealth, possessor of all knowledge, or repository of all the scriptures, but from whom did the person acquire all these? There must be someone greater. One might even claim that one earned all this through their own efforts, labour and toil. But surely someone gave it to them in some form or other. This one cannot gainsay. The source from which all authority and all power originate is the Lord of all. Ignoring that omnipotence and deluding oneself that the little power one has acquired is one’s own is indeed selfishness, conceit and pride (ahamkara). (Prema Vahini, Ch 15)
BE GOOD, SEE GOOD, DO GOOD - BABA
மக்கள் தங்களுக்குள் ஏராளமான விதவிதமான சுயநல பழக்கங்களையும், மனப்பாங்குகளையும் வளர்த்துக் கொண்டு, தங்களுக்கே அதிகமான அதிருப்தியை உண்டாக்கிக் கொள்கிறார்கள். அதிகாரம், ஆதிக்கம் மற்றும் பதவி ஆகியவற்றைக் குவித்துக் கொள்வதற்கான பேராசையிலிருந்தே , இவை அனைத்திற்குமான உந்துதல் வருகிறது. பொருட்களுக்கான பேராசை ஒருபோதும் நிரந்தரமாகவும்,முழுமையாகவும் இருக்க முடியாது. உண்மையில் , அப்படிப் பட்ட திருப்தியை அடைவது சாத்தியமானதல்ல.ஒருவர், தான் அனைத்து கலைகளிலும் தேர்ந்தவராகவும், அனைத்து செல்வங்களின் உடமையாளராகவும், அனைத்து அறிவையும் படைத்தவராகவும் அல்லது அனைத்து சாஸ்திரங்களின் களஞ்சியமாகவும் ஆகி விட்டதாக பெருமிதம் கொள்ளக் கூடும்; ஆனால், இந்த நபர், யாரிடமிருந்து இவற்றை எல்லாம் பெற்றார்? இவரை விட உயர்ந்தவர் ஒருவர் இருக்க வேண்டுமே. ஒருவர், தான் இதை எல்லாம், தங்களது சொந்த முயற்சி மற்றும் உழைப்பினால் பெற்று விட்டதாகக் கூட சொந்தம் கொண்டாடக் கூடும். ஆனால், கண்டிப்பாக யாரோ ஒருவர், இவற்றை ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்குக் அளித்திருக்க வேண்டும். இதை யாரும் மறுக்க முடியாது. அனைத்து அதிகாரம் மற்றும் சக்தியின் மூலாதாரம், அனைத்திற்கும் அதிபதியான இறைவனே. இந்த ஸர்வ வல்லமை பொருந்திய இறைவனை உதாசீனம் செய்து விட்டு, ஒருவர், தான் பெற்றுள்ள சிறிய சக்தி தனக்கே சொந்தமானது என்ற மாயையில் மயங்குவது, உண்மையில் சுயநலம், வன்மம் மற்றும் அஹங்காரமே.
நல்லவனாக இரு, நல்லதையே செய், நல்லதையே பார் - பாபா