azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 10 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 10 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

“Eating” doesn’t mean placing food on the tongue and tasting it; it is worthwhile only when food is chewed, swallowed, digested, assimilated into blood stream, and transformed into muscle and bone, into strength and vigour. So too, spiritual understanding must permeate and invigorate all moments of life. It must be expressed through all the organs and senses (karmendriyas and jnanendriyas). One must pace up steadily and reach this high stage. Mere accumulation of learning is not spiritual wisdom (jnana). Only good conduct (sat-guna) is spiritual wisdom. In order that one might do selfless service, a little eating (bhoga) has to be gone through. Such eating is part of the sacrifice (yajna). To make this body-machine function, the fuel of food has to be used. Food is not sacrifice, but it makes sacrifice possible. Therefore, eating food must not be laughed at as catering to greed or as feeding of the stomach. It must be understood as part of worship. (Prema Vahini, Ch 12)
AN OUNCE OF PRACTICE IS WORTH MORE THAN A TON OF PREACHING. - BABA
‘’ சாப்பிடுவது ‘’ என்றால், உணவை நாக்கில் வைத்து, அதைச் சுவைப்பது என்று பொருளல்ல; உணவு, மெல்லப்பட்டு, விழுங்கப்பட்டு, ஜீரணிக்கப்பட்டு, இரத்தத்தில் செரிக்கப்பட்டு, தசை மற்றும் எலும்பாக மாறி, வலிமை மற்றும் வீரியமாக ஆனால் தான் பயனுள்ளதாகிறது. அதைப் போலவே, ஆன்மிகப் புரிதலும், வாழ்வின் எல்லாத் தருணங்களையும் ஊடுருவி, ஊட்டம் அளிக்க வேண்டும். அது, அனைத்து அங்கங்கள் மற்றும் புலன்களின் மூலம் (கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்கள்) வெளிப்பட வேண்டும். ஒருவர் சீராக முன்னேறி, இந்த உயர் நிலையை அடைய வேண்டும்.வெறும் கற்றுக் குவிப்பது ஞானமல்ல. நன்னடத்தை மட்டுமே (ஸத் குணமே) ஞானமாகும். ஒருவர் தன்னலமற்ற சேவை செய்ய வேண்டும் என்றால், ஒரு சிறிதளவு சாப்பிடுவதையும் (போகா) செய்யத் தான் வேண்டும். இப்படி உண்பது யக்ஞத்தின் ஒரு அங்கமே. இந்த உடல் எனும் இயந்திரத்தை இயக்குவதற்கு, உணவு எனும் எரிபொருளை உபயோகப் படுத்த வேண்டும். உணவு யக்ஞம் அல்ல, ஆனால் அது யக்ஞம் செய்வதை சாத்தியமாக்குகிறது. எனவே, உணவு உண்பதை, பேராசைக்குத் தீனி போடுவது அல்லது வயிற்றிற்கு உணவளிப்பது என ஏளனம் செய்யக் கூடாது. அதை வழிபாட்டின் ஒரு அங்கம் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு துளி அளவு கடைப்பிடித்தல், ஒரு மலை அளவு போதனையை விட ,
அதிக மதிப்பு வாய்ந்ததாகும் - பாபா