azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 03 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 03 Jan 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
When you perform an activity (kriya) as an offering to the Lord, your good, the higher good, and the highest good (swartha, parartha, and paramaartha) - all become one. First, I and you become we. Next, we and He become unified. The individual soul (the ‘I’ or jiva) should accomplish identity first with the creation (prakriti or ‘you’) and then with the Supreme Spirit (He or Paramatma). This journey is the significance of chanting the mantra Om Tat Sat. Today, yesterday and tomorrow, Om Tat Sat, is, was, and will be. ‘He’ and ‘I’ and the spiritual practice (sadhana) is also always there. Just as the sun is inseparable and is never apart from its rays, under no circumstances should any aspirant be without their spiritual practice. It is only when spiritual aspirants adhere to their spiritual disciplines in such an incessant manner that they can be said to be one with Om. (Prema Vahini, Ch 1)
THE RECOGNITION OF DIVINITY IN MAN WILL LEAD TO
THE REALISATION OF THE UNITY OF MANKIND. - BABA
எப்போது நீங்கள் ஒரு பணியை, ஒரு இறையார்ப்பணமாகச் செய்கிறீர்களோ, அப்போது, தனக்காகச் செய்யப்படுபவை, பிறருக்காகச் செய்யப்படுபவை, இறைவனுக்காகச் செய்யப்படுபவை( ஸ்வார்த்த, பாரார்த்த மற்றும் பரமார்த்த) என்ற மூன்றும் ஒன்றாகி விடுகின்றன. முதலில், நானும், நீங்களும், நாமாகி விடுகின்றோம். பின்னர், நாமும் இறைவனும் ஒன்றிணைந்து விடுகிறோம். தனிப்பட்ட ஆத்மா (‘’ நான்’’ அல்லது ஜீவ) முதலில், சிருஷ்டியோடும் (ப்ரக்ருதி அல்லது ‘’ நீ ‘’), பின்னர் பரமாத்மாவுடன், தன்னை இனம் கண்டு கொள்ள வேண்டும். இந்தப் பயணமே, ஓம் தத் ஸத் என்ற மந்திர உச்சாடனத்தின் உட்கருத்தாகும். இன்று, நேற்று மற்றும் நாளையில், ஓம் தத் ஸத் இருக்கிறது, இருந்தது, இருக்கப் போகிறது. ‘’ இறைவனும்’’, ‘’ நானும் ‘’, ஆன்மிக சாதனையும் கூட எப்போதும் இருப்பவையே. சூரியனும், அதன் கிரணங்களும், எவ்வாறு ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாதவையாகவும், ஒருபோதும் விலகிப் போகாமலும் இருக்கின்றனவோ, அதைப் போல, எந்த ஆன்மிக சாதகனும், எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களது ஆன்மிக சாதனை இல்லாமல் இருக்கக் கூடாது. ஆன்மிக சாதகர்கள் இப்படிப் பட்ட இடையறாத முறையில் அவர்களது ஆன்மிக சாதனையைப் பற்றி ஒழுகும் போது மட்டும் தான் அவர்கள் ஓம் எனும் பிரணவத்துடன் ஒன்றிணைந்து இருப்பதாகக் கூற முடியும்.
மனிதனின் உள்ளார்ந்த தெய்வீகத்தை உணர்வது,
மனித குலத்தின் ஒருமையை உணர்வதற்கு இட்டுச் செல்லும்- பாபா