azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 31 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 31 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

We are now bidding farewell to the current year and welcoming a New Year! There is an intimate relationship between the two. We give a send-off to one while we welcome the other. In the same token, should we not bid farewell to our bad qualities and welcome good and divine qualities? You may offer all your bad qualities to God. There is nothing wrong in this. Indeed, it is only God who can take them and bestow His grace on you to foster good qualities. For example, suppose you have a soiled, torn and mutilated hundred rupee currency note, no one will accept it. But if the number is intact, the Reserve Bank of India will accept it and give a good note of the same value in return. Similarly God alone can and will accept the bad qualities, provided you offer them with sincere devotion and repentance, and in return He will shower His abundant Grace on you! (Divine Discourse, Jan 1, 1994)
BE LIKE A LOTUS, WHICH IS NOT AFFECTED BY THE WATER IN WHICH IT IS BORN. - BABA
நாம் இப்போது, நடக்கும் ஆண்டுக்கு விடை கொடுத்து விட்டு, ஒரு புத்தாண்டை வரவேற்றுக் கொண்டு இருக்கிறோம் ! இவை இரண்டிற்கும் ஒரு நெருங்கிய உறவு உண்டு. நாம் மற்றொன்றை வரவேற்கும் அதே நேரத்தில், நாம் ஒன்றுக்கு விடை கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். அதே மாதிரி, நாம் நமது தீய குணங்களுக்கு விடை கொடுத்து விட்டு, நல்ல மற்றும் தெய்வீக குணங்களை வரவேற்க வேண்டாமா? உங்களது தீய குணங்களை எல்லாம் இறைவனுக்கு அர்ப்பணிக்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மையில், இறைவன் மட்டுமே அவற்றை எடுத்துக் கொண்டு, நற்குணங்களைப் பேணுவதற்காக, உங்கள் மீது அவனது கருணையைப் பொழிவான். உதாரணமாக, உங்களிடம் ஒரு, கறைபடிந்த, கிழிந்த அல்லது துண்டு துண்டான ஒரு நூறு ரூபாய் நோட்டு இருந்தால், அதை ஒருவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால், அதில் அதன் எண் அழியாமல் இருந்தால், இந்திய ரிசர்வ் வங்கி அதை வாங்கிக் கொண்டு, அதே மதிப்புள்ள ஒரு நல்ல நோட்டை உங்களுக்குத் திரும்பித் தரும். அதைப் போல, நீங்கள் மனப்பூர்வமான பக்தி மற்றும் பச்சாதாபத்துடன் அர்ப்பணித்தால், தீய குணங்களை இறைவன் ஒருவனால் மட்டுமே அவற்றை ஏற்றுக் கொள்ள முடியும்; பதிலுக்கு அவன் தனது அளவற்ற கருணையை உங்கள் மீது பொழிந்திடுவான்!
தான் எந்த நீரில் பிறந்ததோ, அதனால் பாதிக்கப் படாமல்
இருக்கும் ஒரு தாமரையைப் போல இருங்கள்- பாபா