azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 30 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 30 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Plant the seed of devotion of remembering Lord’s name (namasmarana) in your mind. That will grow into a tree with branches of virtue, service, sacrifice, love, equanimity, fortitude and courage. You swallow food, without being aware of how it is transformed into energy, intelligence, emotion and health. Similarly, swallow the food for the spirit, this remembrance of Lord’s name, and watch how it gets transmuted into virtues without you being aware of it. Ravana discovered that Rama and kama (desire) cannot coexist in the mind. Develop steadiness in the recitation of the Name of God and in the worth of that Name. Then, even if the whole world says, “Do evil,” you will refuse to obey; your system itself will revolt against it. And even if the whole world asks you to desist, you will insist on doing right. (Divine Discourse, Feb 27, 1961)
WINNING LOVE THROUGH LOVE IS THE VITAL ASPECT OF DEVOTION. - BABA
இறைநாம ஸ்மரணை எனும் பக்தியின் விதையை உங்கள் மனதில் விதைத்து விடுங்கள். அது, ஒழுக்கம், சேவை, தியாகம், ப்ரேமை, சமச்சீரான மனப்பாங்கு, மனவலிமை மற்றும் தைரியத்தின் கிளைகள் கொண்ட ஒரு மரமாக வளர்ந்து விடும். அது எவ்வாறு சக்தி, புத்தி, உணர்வு மற்றும் ஆரோக்யமாக மாறுகிறது என்பதை நீங்கள் அறியாமலேயே, நீங்கள் உணவை விழுங்குகிறீர்கள். அதைப் போலவே, இந்த இறை நாமஸ்மரணை எனும் ஆத்மாவிற்கான உணவை விழுங்குங்கள்; அது நீங்கள் அறியாமலேயே, எவ்வாறு நல்லொழுக்கங்களாக புடமிட்டு பண்படுகிறது என்பதைக் கவனியுங்கள். ராவணன், ராமனும் காமனும் மனதில் ஒன்று சேர்ந்து இருக்க முடியாது என்பதைக் கண்டறிந்தான். இறைநாம ஸ்மரணையிலும், அந்தத் திருநாமத்தின் மதிப்பிலும் நிலைத்து இருப்பதை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள்.பின்னர், இந்த உலகமே ‘’தீங்கு செய் ‘’ என்று சொன்னாலும், நீங்கள் அதற்கு அடிபணிய மறுத்து விடுவீர்கள்; உங்களது அமைப்பே அதற்கு எதிராகப் போராடத் துவங்கும். மேலும், இந்த உலகனைத்தும் உங்களைத் தடுத்தாலும், நீங்கள் சரியானவற்றைச் செய்வதையே வலியுறுத்துவீர்கள்.
ப்ரேமையை, ப்ரேமையின் மூலம் வெல்வதே,
பக்தியின் இன்றியமையாத அம்சம் ஆகும் - பாபா