azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 26 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 26 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Hanuman is the brightest example of a realised soul who succeeded in the journey of life. When he first presented himself before Rama and offered his services, Rama turned to Lakshmana and said, "Brother, listen! Notice how Hanuman has mastered the Vedas. His speech is saturated with humility and dedication which the Rig Veda embodies, the retentiveness and reverence that Yajur Veda promotes and the intuitive vision that Sama Veda grants. Hanuman is a genuine devotee and knows all scriptural texts. Sugriva is fortunate to have Hanuman as his minister whose thoughts, words and deeds are offered to God.” When these three are in perfect harmony, they will surely win God’s Grace, just as Hanuman succeeded! - Divine Discourse, Apr 18, 1986
PURITY IS THE ESSENCE OF ALL SADHANA. - BABA
தன்னை உணர்ந்த ஆத்மாக்களில், வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி பெற்று ஒளிர்விடும் ஒரு உதாரணம் ஹனுமானே. அவர், ஸ்ரீ ராமர் முன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, தனது சேவைகளை அர்ப்பணித்த போது, ஸ்ரீராமர், லக்ஷ்மணனை நோக்கி,’’ சகோதரா! கேள்! ஹனுமான் வேதங்களை எப்படி கற்றுணந்திருக்கிறான் என்பதை கவனி. அவரது பேச்சு, ரிக் வேதம் உருவகிக்கும் பணிவு மற்றும் அர்ப்பணிப்பிலும், யஜூர் வேதம் வளர்க்கும் ஞாபகசக்தி மற்றும் பயபக்தியிலும், சாம வேதம் அளிக்கும் உள்ளார்ந்த திருஷ்டியிலும், தோய்ந்திருக்கிறது. ஹனுமான் ஒரு உண்மையான பக்தன் மேலும் அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவன். தனது சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணித்துள்ள ஹனுமானை மந்திரியாகப் பெற்ற சுக்ரீவன் அதிர்ஷ்ட சாலியே ‘’ என்றார். எப்போது, இந்த மூன்றும் சரியான இசைவுடன் இருக்கிறதோ, ஹனுமான் வெற்றி பெற்றதைப் போல, அவை, இறை அருளை கண்டிப்பாகப் பெற்றுத் தரும்.
பரிசுத்தமே அனைத்து ஆன்மிக சாதனைகளின் சாரமாகும்- பாபா