azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 25 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 25 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Jesus Christ demonstrated and preached the power of faith and ultimately, invited on Himself the supreme sacrifice of life itself. Jesus was conscious of His supreme purpose and duty, and sanctified His body by sacrificing it for protecting others. With faith in the oneness of humanity, Jesus stood against opponents and critics, and confronted their onslaughts. Jesus taught Peter, His foremost disciple, to live in love, for Love is God. Jesus advised that one can experience God only when one becomes the embodiment of Love, who doesn't seek anything or expect even gratitude in return! Love spontaneously becomes sacrifice and service! When Peter listened to such exhortations from the Master, he found a new joy welling up within him and also, a new meaning in the word ‘joy’. 'J' meant Jesus and the letter directed him to love Jesus first. 'O' meant others who must be loved next. 'Y' meant yourself who ought to be loved only last. - Divine Discourse, Dec 25, 1986
FAITH IN GOD IS THE BEDROCK THAT CAN SAVE YOU FROM ANY DOWNFALL. - BABA
ஏசு கிருஸ்து, இறைநம்பிக்கையின் வலிமையை எடுத்துக் காட்டி, போதித்தார்; இறுதியில், வாழ்க்கையையே தியாகம் செய்ய வேண்டிய நிலைமையை தனக்கே வரவழைத்துக் கொண்டார். ஏசு, தனது தலைசிறந்த குறிக்கோள் மற்றும் கடமையை உணர்ந்திருந்தார்; பிறரைக் காப்பாற்றுவதற்காக தனது உடலையே தியாகம் செய்ததன் மூலம், அதைப் புனிதப் படுத்தினார். மனித உலகின் ஒருமையில் நம்பிக்கை வைத்து, ஏசு கிருஸ்து எதிரிகளையும் விமர்சகர்களையும் எதிர்த்து நின்று, அவர்களின் தாக்குதல்களை எதிர்கொண்டார். ஏசு கிருஸ்து, தனது முதன்மை சீடரான, பீட்டருக்கு, ப்ரேமையே இறைவன் என்பதால்,ப்ரேமையில் வாழுமாறு போதித்தார். எப்போது ஒருவர் ப்ரேமையின் திருவுருவமாகி, எதையும் நாடாமலோ அல்லது நன்றி உணர்வைக் கூடத் திரும்ப எதிர்பார்க்காமலோ இருந்தால் மட்டுமே இறைவனை அனுபவிக்க முடியும் என ஏசு அறிவுறுத்தினார்.ப்ரேமை தானாகவே தியாகமாகவும், சேவையாகவும் ஆகி விடுகிறது ! பீட்டர், இப்படிப் பட்ட அறிவுரைகளை தனது குருவிடமிருந்து கேட்டபோது, தன்னுள் ஒரு புதிய சந்தோஷம் ஊற்றெடுத்து வருவதையும், மேலும் ‘’JOY “(சந்தோஷம்) என்ற வார்த்தைக்கு ஒரு புதிய அர்த்தத்தையும் கண்டார். ‘’J “என்றால் JESUS: அந்த எழுத்து அவரை ஜீஸஸை முதலில் நேசிக்க வேண்டும் எனப் பணிக்கிறது. ‘’O ‘’ என்றால், ‘’ OTHERS “, அதாவது மற்றவர்களை அடுத்த படியாக நேசிக்க வேண்டும். ‘’Y” என்றால், YOURSELF அதாவது தன்னை கடைசியாக நேசிக்க வேண்டும்.
இறை நம்பிக்கையே, எந்த வீழ்ச்சியிலிருந்தும் உங்களைக் காக்க வல்ல வலுவான அடித்தளமாகும் - பாபா