azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 24 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 24 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

The destiny of a nation or community is dependent on the moral fibre of its people. Their character must be deep-rooted in faith and in truth. Today, in a world broken into racial and religious units, there is a great need to cultivate a broad outlook and large hearted attitudes. Narrow loyalties cause friction and conflict. Jesus emphasised the importance of faith and the danger caused by hypocrisy. Christ’s teachings must be interpreted, understood and followed from the universal point of view. Truth must be revealed as unity in Thought, Word and Deed. Jesus Christ proclaimed that God is all powerful and omnipresent, one without a second. This is the primary message of Jesus. His understanding of God grew within him in stages. First he looked upon himself as a Messenger of God. Later, developing a closer relationship with God, he announced himself as the Son of God. Finally, realising his identity with God, he asserted, "I and my Father are One." - Divine Discourse, Dec 25, 1986
FAITH IN GOD IS THE BEDROCK THAT CAN SAVE YOU FROM ANY DOWNFALL. - BABA
ஒரு தேசம் அல்லது சமூகத்தின் தலைவிதி, அதன் மக்களின் ஒழுக்க சீலத்தைப் பொறுத்திருக்கிறது. அவர்களது குணநலன், தெய்வ நம்பிக்கை மற்றும் சத்தியத்தில் ஆழப் பதிந்திருக்க வேண்டும். குல மற்றும் மதப் பிரிவுகளாக உடைந்திருக்கும் இன்றைய ஒரு உலகத்தில், ஒரு பரந்த கண்ணோட்டம் மற்றும் விசாலமான இதய மனப்பாங்கு ஆகியவற்றின் தேவை அதிகமாக இருக்கிறது. குறுகிய மனப்பாங்கு கொண்ட விசுவாசங்கள், விரிசல்களையும், மோதல்களையும் ஏற்படுத்துகின்றன. ஏசு கிருஸ்து இறைநம்பிக்கையின் முக்கியத்துவத்தையும், போலித்தனத்தினால் விளையும் அபாயத்தையும் வலியுறுத்தினார். ஏசு கிருஸ்துவின் போதனைகளை, உலகியலான கண்ணோட்டத்துடன் அர்த்தம் செய்து, புரிந்து கொண்டு, கடைப்பிடிக்க வேண்டும். சிந்தனை, சொல் மற்றும் செயலின் ஒருமையாக, சத்தியம் வெளிப்பட வேண்டும். இறைவன், இரண்டாவது என இல்லாத, சர்வ வல்லமையும் பொருந்திய, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த ஒருவன் என, ஏசு கிருஸ்து, பறைசாற்றினார். இதுவே ஏசு கிருஸ்துவின் முக்கியமான போதனையாகும். இறைவனைப் பற்றிய அவரது புரிதல் படிப் படியாக வளர்ந்தது. முதலில், அவர் தன்னை, இறைவனது தூதராகக் கருதினார். பின்னர், இறைவனுடன் ஒரு நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்ட பின், அவர் தன்னையே இறைவனது மகனாக அறிவித்துக் கொண்டார். இறுதியில், தன்னை இறைவனுடன் இனம் கண்டு கொண்டு, "நானும், எனது தந்தையும் ஒருவரே" என உறுதிப் படுத்தினார்.
இறை நம்பிக்கையே, எந்த வீழ்ச்சியிலிருந்தும் உங்களைக்
காக்க வல்ல வலுவான அடித்தளமாகும் - பாபா