azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 20 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 20 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

You must be happy that the Lord has placed newer and newer materials to serve Him and worship Him in various means and forms. Pray for ever new opportunities and exult in the chance that your hands receive. This attitude gives immeasurable joy. To lead a life suffused with this joy is indeed bliss. Whatever is done from sunrise to sunset must be consecrated as if it is the worship of the Lord. Just as care is taken to pluck only fresh flowers and to keep them clean and unfaded, so too, ceaseless effort should be made to do deeds that are pure and unsullied. If this vision is kept before the mind’s eye everyday and life is lived accordingly, then it becomes one long unbroken service of the Lord. The feeling of ‘I’ and ‘You’ will soon disappear; all traces of self will be destroyed. Life then transmutes itself into a veritable devotion to the Lord. - Prema Vahini, Ch 8
GOD IS ALL MERCY; ADORE HIM AS LONG AS YOU HAVE BREATH, SO LONG AS YOU ARE CONSCIOUS. - BABA
பல விதமான வழிகளிலும், ரூபங்களிலும் அவனுக்கு சேவை ஆற்றி. வழிபடுவதற்காக, புதுப் புதுப் பொருட்களை இறைவன் அளித்திருக்கிறான் என்று நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். எப்போதும் புதிய வாய்ப்புக்களுக்காகப் பிரார்த்தித்து உங்களது கரங்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்திற்காகக் குதூகலம் அடையுங்கள்.இந்த மனப்பாங்கு அளவிட முடியாத சந்தோஷத்தை அளிக்கிறது. இந்த சந்தோஷத்தில் தோய்ந்த ஒரு வாழ்க்கையை நடத்துவதே உண்மையில் பேரானந்தமாகும். சூரியோதயத்திலிருந்து, அஸ்தமனம் வரை செய்யும் எதுவும், இறைவழிபாடாகக் கருதி அர்ப்பணிக்கப் பட வேண்டும். எவ்வாறு புதிய மலர்களை மட்டுமே பறித்து, அவற்றை சுத்தமாகவும், வாடி விடாமலும் இருக்குமாறு வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தப் படுகிறதோ, அவ்வாறே செயல்கள் அனைத்தும் பரிசுத்தமானதாகவும், களங்கமற்றதாகவும் இருக்குமாறு செய்வதற்கு இடையறாத முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தை, அனுதினமும், மனக் கண் முன் வைத்து, அதற்கேற்றபடி வாழ்க்கை நடத்தினால், பின்னர் அதுவே ஒரு இடையீடு இல்லாத இறைவனது சேவையாக ஆகி விடும்.’’நான்’’, ‘’ நீ’’ என்ற உணர்வுகள் விரைவில் மறைந்து விடும்; சுயநலத்தின் சுவடுகள் அழிக்கப் பட்டு விடும். வாழ்க்கை பின்னர், தானாகவே, ஒரு மெய்யான இறை பக்தியாக பண்பட்டு விடும்.
இறைவன் கருணையே நிறைந்தவன்; உங்களுள் மூச்சு இருக்கும் வரையிலும், உங்களுக்கு நினைவு இருக்கும் வரையிலும் அவனைப் போற்றி வழிபடுங்கள் - பாபா