azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 18 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 18 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
The one who is unable to imbibe true wisdom which broadens the mind and explore the inner truth about life, cannot promote the welfare of the world. The well-being of the world depends on the well-being of society and the latter depends on the welfare of individuals. All these are mutually interdependent. They are integrally related to one another. Hence the need for individuals in society to be truthful in thought, word and deed. This spiritual principle dearly warns those who mouth slogans of peace but indulge in acts inimical to peace. Human life can be truly understood only in the context of harmony and co-operation. For this to be realised, one must engage oneself in service to society. Such service is rooted in spiritual faith. (Divine Discourse, Feb 11, 1983)
BE LIKE A LOTUS, WHICH IS NOT AFFECTED BY THE WATER IN WHICH IT IS BORN. - BABA
மனதை விசாலமாக்கி, வாழ்க்கையின் அக சத்தியத்தை ஆராயவல்ல உண்மையான ஞானத்தை உள்ளீர்த்துக் கொள்ள இயலாத ஒருவரால், உலகின் நலனைப் பேண முடியாது. உலகின் நலன், சமுதாயத்தின் நலனைச் சார்ந்தும், சமுதாயத்தின் நலன் தனி மனிதர்களின் நலனைச் சார்ந்துமே இருக்கிறது. இவை அனைத்தும் பரஸ்பரம் சார்ந்தவை. அவை ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்தவை. எனவே, தனி மனிதர்கள், சிந்தனை, சொல் மற்றும் செயலில் நேர்மையானவர்களாக இருப்பது அவசியமாகிறது. சாந்தியைப் பற்றி கோஷமிட்டு விட்டு, ஆனால்,சாந்திக்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோரை, இந்த ஆன்மிகக் கோட்பாடு அன்புடன் எச்சரிக்கிறது. நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பின் பின்னணியில் மட்டுமே மனித வாழ்க்கையை உண்மையாக புரிந்து கொள்ள முடியும். இதை உணருவதற்கு, ஒருவர், தன்னையே சமுதாய சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இப்படிப் பட்ட சேவை ஆன்மிக நம்பிக்கையில் வேறூன்றியதாகும்.
தான் எந்த நீரில் பிறந்ததோ, அதனால் பாதிக்கப் படாமல்
இருக்கும் ஒரு தாமரையைப் போல இருங்கள்- பாபா