azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 15 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 15 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Education must be regarded as a sacred process and preparation for unselfish service to society. There are innumerable people in the world who are suffering from various physical and other disabilities. It is the duty of educated persons to serve them and help to relieve their suffering to the maximum extent possible. This is the best form of service to the Divine. There is pollution and impurity in the air, water and in many things around us. You must use the knowledge you acquire to purify what is impure. Service to society must become the primary purpose of education. Students of Sai should devote their knowledge not only to earn a living, but to use their talents and energies in whatever walk of life they may be engaged in to render service to society in all ways open to them. (Divine Discourse, Feb 5, 1984)
REIGNING IN YOUR SENSES IS A MARK OF GROWING IN WISDOM. - BABA
கல்வியை ஒரு புனிதமான முறையாகவும், சமுதாயத்திற்கு தன்னலமற்ற சேவை ஆற்றுவதற்கான ஒரு முன்னேற்பாடாகவும் கருத வேண்டும்.பல விதமான உடல் மற்றும் இதர ஊனங்களால் துன்பப்படும் எண்ணற்ற மக்கள் இந்த உலகில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சேவை ஆற்றி, முடிந்த வரை அவர்களது துன்பங்களுக்கு நிவாரணம் கிடைக்க உதவுவது படித்த மனிதர்களின் கடமையாகும். இறைவனுக்கு செய்யக் கூடிய மிகச் சிறந்த சேவை இதுவே. காற்று, தண்ணீர் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பலவற்றில் மாசும், அசுத்தமும் உள்ளது. தூய்மையற்றவற்றை, தூய்மைப் படுத்த நீங்கள் பெற்ற அறிவைப் பயன்படுத்த வேண்டும். சமுதாயத்திற்குச் சேவை ஆற்றுவதே கல்வியின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். சாயியின் மாணவர்கள், தங்களது அறிவை, வாழ்க்கைக்குச் சம்பாதிப்பதற்காக மட்டும் அல்லாமல், அவர்கள் வாழ்க்கையின் எந்தத் துறையில் ஈடுபட்டு இருந்தாலும், தங்களது திறமைகளையும், சக்தியையும், அவர்களுக்கு கிடைக்கும் எல்லா வழிகளிலும், சமுதாயத்திற்குச் சேவை ஆற்றுவதற்கு அர்ப்பணிக்க வேண்டும்.
உங்கள் புலன்களைக் கட்டுப் படுத்துவதே,
ஞான வளர்ச்சியின் ஒரு அறிகுறியாகும்- பாபா