azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 11 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 11 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Man does not live long. However in this short span of life he has the ability to experience divine bliss. Two people might appear ostensibly made of the same mould. Their limbs might look alike. Nevertheless, one could turn out to be an angel and another a beast. What is the reason for this? Looking at their behaviour, it is hard to believe that both of them belong to the same community. Therefore, primarily behaviour is important for man. Each and every moment, human life may superficially appear to be simple but truly it is not so; there is a great meaning inherent in it. The entire life is a great act of sacrifice or yajna karma. If the sleep that one enjoys after offering all the experiences of the day to the Lord in a spirit of surrender, is not Samadhi then what else is it? Because of the all pervasive feeling of “I am the Body”, man, without discrimination, explores various ways to boost his physical being. Therefore, instead of thinking day and night about the body, preserve it only for the purpose of serving all living beings with Trikarana shuddhi - purity of thought, word and deed, so that you can realize the Higher Self, as you are not the body but the Atma. (Prema Vahini, Chap 4)
TRANSFORM WORK INTO WORSHIP, AND WORSHIP INTO WISDOM. - BABA
மனிதன் அதிக காலம் உயிர் வாழ்வதில்லை. ஆனால், இந்தக் குறைந்த வாழ்நாளில், தெய்வீக ஆனந்தத்தை அனுபவிப்பதற்கான திறன் அவனிடம் உள்ளது. இரண்டு மனிதர்கள், மேலோட்டமாகப் பார்த்தால், ஒரே அச்சில் வார்த்தது போல தோன்றக் கூடும். அவர்களது அங்கங்கள் ஒரே மாதிரியாக காணப்படலாம். இருந்த போதும் ஒருவர் ஒரு தேவதை போல நடந்து கொள்ளலாம், மற்றொருவர் ஒரு மிருகம் போல நடந்த கொள்ளக் கூடும். இதற்குக் காரணம் என்ன? அவர்களது நடத்தையைப் பார்த்தால், இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்புவது கடினமாக இருக்கும்.எனவே, நடத்தையே மனிதனுக்குப் பிரதானமானதாகும். ஒவ்வொரு தருணத்திலும் மனித வாழ்க்கை மிகவும் எளிதானதாகத் தோன்றலாம்; ஆனால் உண்மையில் அவ்வாறு அல்ல; அதில் ஒரு உள்ளார்ந்த மிகச் சிறந்த அர்த்தம் ஒன்று உள்ளது. வாழ்க்கை முழுவதும் ஒரு தலை சிறந்த வேள்வியாகும் அதாவது யக்ஞ கர்மா. நாளின் அனைத்து அனுபவங்களையும், ஒரு சரணாகதி உணர்வில் இறைவனுக்கு அர்ப்பணித்த பின் ஒருவர் இன்புற்று அனுபவிக்கும் உறக்கம், சமாதி அன்று வேறென்ன? எங்கும் ஊடுருவி இருக்கும் ‘’ நான் இந்த உடலே ‘’ என்ற உணர்வின் காரணமாக, மனிதன், பகுத்தறிவின்றி, உடலைப் பெருக்குவதற்கான பல வழிகளையே தேடுகிறான். எனவே,இரவும் , பகலும் உடலைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்காமல், அதை, திரிகரண சுத்தியுடன், அதாவது , சிந்தனை, சொல் மற்றும் செயலின் தூய்மையுடன் அனைத்து ஜீவராசிகளுக்கும் சேவை ஆற்றும் குறிக்கோளுக்காக மட்டும் பராமரியுங்கள்; நீங்கள் உடல் அல்ல , ஆத்மாவே என்பதனால், அதன் மூலம் பரமாத்மாவை நீங்கள் உணர முடியும்.
கர்மாவை, பக்தியாகவும், பக்தியை ,ஞானமாகவும் மாற்றுங்கள்- பாபா