azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 05 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 05 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Develop faith in the Atma principle and love it earnestly —this is true worship. The Atma is the one and only Loved One for humanity. Feel that it is more lovable than any object here or hereafter —that is the true adoration one can offer to God. You must live in the world where they are born like the lotus leaf, which, though born in water, floats upon it without being affected or wetted by it. Of course, it is good to love and adore God with a view to gain some valuable fruit either here or hereafter, but since there is no fruit or object more valuable than God or more worthwhile than God, the Vedas advise us to love God with no touch of desire in our minds. Love, since you must love for love’s sake; love God, since whatever He can give is less than He Himself; love Him alone, with no other wish or demand. (Sathya Sai Vahini, Ch 1)
GOD IS ALL MERCY; ADORE HIM AS LONG AS YOU HAVE BREATH,
SO LONG AS YOU ARE CONSCIOUS. - BABA
ஆத்ம தத்துவத்தை வளர்த்துக் கொண்டு, அதை உளமாற நேசியுங்கள்- அதுவே உண்மையான வழிபாடாகும்.மனித குலம் நேசிக்க வேண்டிய ஒன்றே ஒன்று ஆத்மாவே. அகத்திலும், பரத்திலும் எந்தப் பொருளையும் விட அதிகமாக நேசிக்கப் பட வேண்டியது அது ஒன்று தான் என்று உணருங்கள்- அதுவே ஒருவர் இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடிய உண்மையான ஆராதனையாகும். எவ்வாறு ஒரு தாமரை இலை, அது பிறந்தது தண்ணீரில் தான் என்றாலும், அதனால் பாதிக்கப் படாமலும் அல்லது நனைக்கப் படாமலும் அதில் மிதந்து கொண்டு இருக்கிறதோ, அவ்வாறே நீங்கள் பிறந்த இந்த உலகில் வாழுங்கள். இகத்திலோ அல்லது பரத்திலோ ஏதோ ஒரு விலைமதிப்புள்ள பலனைப் பெறும் ஒரு நோக்கத்தோடு இறைவனை நேசித்து ஆராதிப்பது நல்லது தான்; ஆனால், எந்தப் பலனும் அல்லது பொருளும், இறைவனை விட அதிக மதிப்புள்ளதோ அல்லது மதிக்கத் தக்கதோ இல்லை என்பதால், வேதங்கள் நம்மை, மனதில் எந்த விதமான ஆசையின் தீண்டலும் இன்றி இறைவனையே நேசிக்குமாறு அறிவுறுத்துகின்றன. நீங்கள் ப்ரேமைக்காகவே நேசிக்க வேண்டும் என்பதால், இறைவனை நேசியுங்கள்; அவன் தரும் எதுவும் அவனை விடத் தாழ்ந்ததே என்பதால் இறைவனை நேசியுங்கள்; வேறு எந்த ஆசையோ அல்லது கோரிக்கையோ இல்லாமல், அவனை மட்டுமே நேசியுங்கள்.
இறைவன் கருணையே நிறைந்தவன்; உங்களுள் மூச்சு இருக்கும் வரையிலும், உங்களுக்கு நினைவு இருக்கும் வரையிலும் அவனைப் போற்றி வழிபடுங்கள் - பாபா