azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 04 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 04 Dec 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Human life is undoubtedly the highest in evolution, and to give it meaning, spiritual endeavour and effort that is pure and holy, is essential. For this way of life, character is most important. Character makes life immortal; it survives even death. Some say that knowledge is power, but it is not true. Character is power. Even the acquisition of knowledge demands a good character. So everyone must yearn to attain flawless character, without any trace of evil. Buddha, Jesus Christ, Shankaracharya, and Vivekananda, as well as great sages, saints and devotees of the Lord are treasured in the memory of people even to this day! What quality made them all memorable for all times? It is their character! Without character, wealth, education, and social status are of no avail. Character is the fragrance of the flower; it gives value and worth. Poets, painters, artists, and scientists may be great, each in their own field, but without character, they can have no standing in society. (Prema Vahini, Ch 1)
GOOD CHARACTER IS POWER! - BABA
பரிணாம வளர்ச்சியில், சந்தேகத்திற்கு இடமின்றி, மனித ஜன்மம் தலை சிறந்ததே; அதற்கு ஒரு அர்த்தம் கொடுப்பதற்கு, பரிசுத்தமான மற்றும் புனிதமான ஆன்மிக சாதனையும், முயற்சியும் அத்தியாவசியம். இப்படிப் பட்ட வாழ்க்கைக்கு, நற்குணசீலமே மிகவும் முக்கியமானதாகும். நற்குண சீலம் வாழ்க்கையை அமரத்துவமாக்கிறது; அது இறப்பிற்குப் பின்னும் கூட நிலை பெறுகிறது. சிலர், அறிவே பலம் என்பார்கள்; ஆனால் அது உண்மையல்ல. நற்குண சீலமே பலமாகும். அறிவைப் பெறுவதற்கும் ஒரு சிறந்த நற்குண சீலம் தேவை. எனவே, ஒவ்வொருவரும், அப்பழுக்கற்ற, தீங்கின் ஒரு சுவடு கூட இல்லாத, குணசீலத்தைப் பெற ஏங்க வேண்டும். பகவான் புத்தர், ஏசு கிருஸ்து, ஆதி சங்கரர் மற்றும் விவேகானந்தர் மற்றும் ரிஷிகள், முனிவர்கள், இறைவனின் பக்தர்கள் ஆகியோரும், இன்றும் கூட மக்களின் மனதில் பொக்கிஷமாகப் போற்றப்படுகிறார்கள்! எல்லாக் காலங்களிலும் நினைவில் நிற்கக்கூடியவர்களாக அவர்களை ஆக்கிய குணம் எது? அது அவர்களது நற்குண சீலமே! நற்குண சீலம் இன்றி, செல்வம், கல்வி மற்றும் சமுதாய அந்தஸ்து ஆகியவை பயனற்றவையே. நற்குண சீலம் மலரின் நறுமணத்தைப் போன்றது; அதுவே, மலருக்கு ஒரு மதிப்பையும், மரியாதையையும் அளிக்கிறது. கவிஞர்கள், ஓவியர்கள், கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சிறந்தவர்களாக இருக்கக் கூடும்; ஆனால், நற்குண சீலம் இன்றி அவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு மதிப்பு கிடைக்காது.
நற்குண சீலமே பலமாகும்- பாபா