azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 27 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 27 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
There is a law of cause and effect; every karma (action) has a consequence, whether you like it, anticipate it or not! A good karma produces good results; a bad one will produce a bad result. Birth is the result of the karma done before death. If you are asked what happens to a person after death, you can point to yourself and declare, "This is what happens - Re-birth happens!” This is no religion of despair; it is a religion of hope, of assurance, of encouragement to lead an active, useful and beneficent life. For, the future is in your hands. Though today has already been shaped by yesterday, tomorrow can be shaped by today! Various types of Karma are performed to induce detachment, to channelise the desire towards eternal and universal ends, to transmute all acts into acts of worship, to offer adoration to God who presides over every force of Nature, every energy of man, and every limb of his anatomy! (Divine Discourse, Oct 15, 1967)
PRACTICE THE ATTITUDE OF OFFERING EVERY ACT AT THE FEET OF GOD
AS A FLOWER IS OFFERED IN WORSHIP. - BABA
காரணம் மற்றும் காரியம் என்று ஒரு விதி இருக்கிறது; உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அதை எதிர்பார்க்கிறீர்களோ இல்லையோ, ஒவ்வொரு கர்மாவிற்கும் ஒரு விளைவு உள்ளது. ஒரு நல்ல கர்மா , நல்ல விளைவை ஏற்படுத்துகிறது ; தீய கர்மா தீய விளைவை உண்டாக்குகிறது. பிறப்பே, இறப்பிற்கு முன்னால் செய்த கர்ம வினையின் பலனே. இறப்பிற்குப் பின்னால் என்ன ஆகிறது என்று உங்களை யாராவது கேட்டால், நீங்கள் உங்களையே சுட்டிக் காட்டி ‘’ இதுதான் ஆகிறது – மறு பிறப்பு ஏற்படுகிறது ‘’ என்று கூறலாம்.இது விரக்தியின் ஒரு மதம் அல்ல; இது நம்பிக்கை, உறுதி, மற்றும் செயல் திறன் கொண்ட பயனுள்ள, பயனளிக்கும் வாழ்க்கை நடத்துவதற்கான ஊக்கம் அளிக்கும் மதமாகும். ஏனெனில் எதிர்காலம் உங்கள் கையில் இருக்கிறது. இன்று என்பது நேற்றினால் உருவாக்கப் பட்டது தான் என்றாலும், நாளை என்பதை இன்றிலிருந்து உருவாக்க முடியும்! வைராக்யத்தைத் தூண்டவும், ஆசையை, நிரந்தரமான, பிரபஞ்சமயமான விளைவுகளை நோக்கிச் செலுத்தவும், அனைத்து செயல்களையும் இறை வழிபாடாக பண்மாற்றம் செய்யவும், இயற்கையின் ஒவ்வொரு சக்தி, மனிதனின் ஒவ்வொரு வலிமை மற்றும் அவனது உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் கொலு வீற்றிருக்கும் இறைவனைப் போற்றுவதற்கும், ஆன பல விதமான கர்மாக்கள் செய்யப் படுகின்றன.
வழிபாட்டில் ஒரு மலரை இறைவனுக்கு அர்ப்பணிப்பது போல,ஒவ்வொரு செயலையும் இறைவனது பாத கமலங்களில் அர்ப்பணிக்கும் மனப்பாங்கினைக் கடைப்பிடியுங்கள்- பாபா