azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 23 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 23 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
There are many who do not understand the Sai principle. “Who is this Sai? Why are certain things happening in this manner?” These questions are asked. I am not a sanyasi (renunciant). I am not a yogi. I am not a bhogi (pleasure-seeker). I am not a tyagi (one who sacrifices). I am ‘I’. This ‘I’ is the first name given to the Atma. A renunciant is bound by certain restrictions. The pleasure-seeker is bound in other ways. I have no limitations. Mine is boundless bliss. My name is ‘I’. It is not a name given after one's birth. To understand Me, everyone has to realise that the ‘I’ is present in everyone. The ‘I’ is used by everyone in every context, whether one is a millionaire or a pauper. This ‘I’ is Brahman. Aham Brahmasmi (I am Brahman). Everyone should strive to recognise the divinity that is present in all. This effort has to be made by everyone. Human birth has been given for this purpose. It cannot be left to God. (Divine Discourse, Nov 23, 1992.)
DEVOTION TO THE DIVINE WILL GIVE YOU BLISS, PROSPERITY AND PEACE. - BABA
சாய் தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாத பலர் இருக்கிறார்கள்.’’ யார் இந்த சாய் ? ஏன் சில விஷயங்கள் இவ்வாறு நடக்கின்றன? ‘’. இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப் படுகின்றன. நான் ஒரு சன்யாசி இல்லை. நான் ஒரு யோகி இல்லை. நான் ஒரு போகி ( சுகத்தை நாடுபவர் ) இல்லை. நான் ஒரு தியாகி இல்லை. நான், ‘’ நானே’’. இந்த ‘’ நான் ‘’ என்பதே ஆத்மாவிற்குக் கொடுக்கப் பட்ட முதல் பெயர். ஒரு சன்யாசி சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவர். சுகத்தை நாடுபவர் வேறு பல வழிகளில் கட்டுண்டவர். எனக்கு வரையறைகளே இல்லை. என்னுடையது கரைகளற்ற ஆனந்தம். என் பெயர், ‘’ நான்’’. இது ஒருவர் பிறந்த பின் சூட்டப் படும் பெயர் அல்ல. என்னைப் புரிந்து கொள்ள, ஒவ்வொருவரும் ‘’ நான்’’ என்பது ஒவ்வொருவருள்ளும் இருக்கிறது என்பதை உணர வேண்டும். ஒருவர் ஒரு தனவந்தரோ அல்லது ஒரு தரித்ரனோ, ‘’ நான்’’ என்பது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொருவராலும் பயன்படுத்தப் படுகிறது. இந்த ‘’ நான் ‘’ என்பதே பரப்ரம்மன். அஹம் ப்ரம்மாஸ்மி ( நானே ப்ரம்மன் ). ஒவ்வொருவரும், அனைவருள்ளும் உறையும் தெய்வீகத்தைப் புரிந்து கொள்ளப் பாடுபட வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொருவரும் செய்தே ஆக வேண்டும். மனிதப் பிறவி இதற்காகவே கொடுக்கப் பட்டுள்ளது.. இதை இறைவனிடம் விட்டு விட முடியாது.
இறைவன் பால் கொள்ளும் பக்தி உங்களுக்கு ஆனந்தம்,
வளமை மற்றும் சாந்தியை அளிக்கிறது. -பாபா