azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 20 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 20 Nov 2019 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Love! Wealth once lost can be regained one way or the other. If a friend is lost, you can make many more through good feelings. But if health is lost, you will suffer in many ways. Your body is a combination of many limbs, only when all limbs are utilised for sacred purposes, will you have pushti and santushti (good health and happiness). A healthy human body is the very foundation for all virtuous actions. It is the primary requisite for the realisation of the four objectives of human life — righteousness (dharma), wealth (artha), desire (kama), and liberation (moksha). Investigate why you lose health. Excessive thinking, worrying, and extended work hours is the main cause for your illness. Excessive activity in any field is harmful. Bear in mind the limitations of your body and act accordingly. Do not bestow undue attention on your health. Discharge your duties peacefully and happily, then everything will be fine. (Divine Discourse, Nov 20, 1998)
HEALTH DOES NOT DEPEND ON MEDICINE. GOOD WORDS, GOOD MANNERS, GOOD SIGHT AND GOOD THOUGHTS – THESE ARE ESSENTIAL FOR GOOD HEALTH! - BABA
ப்ரேமையின் திருவுருவங்களே! ஒருமுறை செல்வத்தை இழந்து விட்டால், அதை ஏதோ ஒரு வழியில் திரும்பப் பெற்று விடலாம்.ஒரு நண்பனை இழந்து விட்டால், நல்ல உணர்வுகளின் மூலம் நீங்கள் மேலும் பலருடன் நட்பு கொள்ள முடியும். ஆனால், ஆரோக்யத்தை இழந்து விட்டால், நீங்கள் பல வழிகளில் துன்பப் படுவீர்கள். உங்களுடைய உடல் பல அங்கங்களின் சேர்க்கை; அனைத்து அங்கங்களும் புனிதமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டால் மட்டும் தான், உங்களுக்கு புஷ்டியும், சந்துஷ்டியும் (நல்ல ஆரோக்யமும், சந்தோஷமும்) இருக்கும். ஒரு ஆரோக்யமான உடலே, அனைத்து நல்லொழுக்கமான செயல்களுக்கும் அஸ்திவாரம். இதுவே மனித வாழ்க்கையின் நான்கு விதமான குறிக்கோள்களான தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷத்தை அடைவதற்கான முன் முதல் தேவைகளாகும். நீங்கள் ஆரோக்யத்தை ஏன் இழக்கிறீர்கள் என்று ஆராயுங்கள். அளவுக்கு மீறிய சிந்தனை, கவலை மற்றும் நீட்டிக்கப் பட்ட வேலை நேரம் ஆகியவையே உங்களது வியாதிக்கான காரணங்கள். எந்தத் துறையிலும் அளவுக்கு மீறிய செயல்பாடு தீமை பயப்பதே. உங்களது உடலின் வரம்புகளை மனதில் கொண்டு, அதற்கு ஏற்ப செயல்படுங்கள். உங்களது ஆரோக்யத்தின் மீது தேவையற்ற கவனத்தையும் செலுத்த வேண்டாம். உங்களது கடமைகளை சாந்தமாகவும், சந்தோஷமாகவும் ஆற்றுங்கள்; பின்னர் அனைத்தும் நன்றாகவே அமையும்.
ஆரோக்யம் என்பது மருந்தைப் பொறுத்தல்ல.நல்ல வார்த்தைகள், நல்ல நடத்தைகள்,நல்ல பார்வை மற்றும் நல்ல எண்ணங்கள், இவையே நல்ல ஆரோக்யத்திற்கு அத்தியாவசியமானவையாகும்- பாபா